/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மனைவி முகத்தில் ஆசிட் ஊற்றிய கணவன் கைது
/
மனைவி முகத்தில் ஆசிட் ஊற்றிய கணவன் கைது
ADDED : மே 06, 2024 10:46 PM
பாலக்காடு:பாலக்காடு அருகே, பிரிந்து வாழும் மனைவியின் முகத்தில் ஆசிட் ஊற்றிய கணவனை போலீசார் கைது செய்தனர்.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், ஒலவக்கோட்டை சேர்ந்தவர் பர்ஷீனா, 26. இவரது கணவன் காஜா ஹுசைன். கணவனுடன் கருத்து வேறுபாடு காரணம் நீண்ட காலமாக, பிரிந்து வாழும் இவர் தாணாவு என்ற இடத்தில் அரசு லாட்டரி சீட்டு விற்பனை செய்யும் கடை நடத்துகிறார்.
இந்நிலையில், நேற்று காலை கடைக்கு வந்த காஜா ஹுசைனுக்கும், பர்ஷீனாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த காஜாஹுசைன், பதுக்கி வைத்திருந்த ஆசிட்டை பர்ஷீனா மீது ஊற்றினார்.
முகத்திலும், கழுத்திலும் தீக்காயமடைந்த அவரை, அப்பகுதி மக்கள் மாவட்ட அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். சம்பவத்திற்குப் பின் தப்ப முயன்ற காஜா ஹுசைனை, அப்பகுதி மக்கள் சிறை பிடித்து, போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவரை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், குடும்பப் பிரச்னை காரணமாக முகத்தில் ஆசிட் ஊற்றியது தெரியவந்தது.