/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மனைவியை துப்பாக்கியால் சுட்டு கொன்று தானும் சுட்டு தற்கொலை செய்த கணவன்
/
மனைவியை துப்பாக்கியால் சுட்டு கொன்று தானும் சுட்டு தற்கொலை செய்த கணவன்
மனைவியை துப்பாக்கியால் சுட்டு கொன்று தானும் சுட்டு தற்கொலை செய்த கணவன்
மனைவியை துப்பாக்கியால் சுட்டு கொன்று தானும் சுட்டு தற்கொலை செய்த கணவன்
ADDED : மார் 04, 2025 07:28 AM

சூலுார்; கோவை அருகே மனைவியை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த கணவன், கேரள மாநிலம், பாலக்காடு சென்று தானும் சுட்டுக்கொண்டு, தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கேரள மாநிலம், பாலக்காடு அடுத்த ஈரட்டுகுளத்தை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார், 52. விவசாயம் மற்றும் சுற்றுலா ஏற்பாடு செய்யும் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி சங்கீதா, 44. தம்பதிக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.
தற்போது, குடும்பத்துடன் கோவை மாவட்டம், சூலுார் பட்டணம் புதுாரில் வசித்து வந்தனர். சங்கீதா தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.
கணவன்,- மனைவி இடையே ஆறு மாதமாக கருத்து வேறுபாடு இருந்ததாக கூறப்படுகிறது. நடத்தை குறித்து சந்தேகம் கொண்டதால், இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், நேற்று காலை, கேரளாவில் இருந்து கிருஷ்ணகுமார் பட்டணம்புதுார் வந்துள்ளார். பெண் குழந்தைகள் பள்ளி சென்றிருந்தனர். அப்போது, கணவன்,- மனைவி இடையே வாக்குவாதம் நடந்துள்ளது. ஆத்திரமடைந்த கிருஷ்ணகுமார், தன்னிடம் இருந்த துப்பாக்கியால், சங்கீதாவை சுட்டு கொலை செய்துவிட்டு, சொந்த ஊருக்கு காரில் புறப்பட்டு சென்றுள்ளார்.
இதுகுறித்து, அருகில் உள்ளோர் சூலுார் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். தடயங்கள் சேகரிக்கப்பட்டன.
எஸ்.பி., கார்த்திகேயன் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டார். வழக்குப்பதிவு செய்த போலீசார், கிருஷ்ணகுமாருக்கு துப்பாக்கி எப்படி கிடைத்தது என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையில், சொந்த ஊரான, பாலக்காடு அடுத்த ஈரட்டுகுளம் சென்ற கிருஷ்ணகுமார், தன் வீட்டின் முன், தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியானது. இதுகுறித்து, பாலக்காடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.