/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'நான் முதல்வன்' திறன் மேம்பாட்டு திட்டம்; ஏ.ஜே.கே., கல்லுாரி முதலிடம்

ADDED : ஆக 29, 2024 10:40 PM
கோவை: தமிழக அரசின் 'நான் முதல்வன்' திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டத்தில் வேலை வாய்ப்பு அளிப்பதில் ஏ.ஜே.கே., கலை அறிவியல் கல்லுாரி முதல் இடம் பிடித்துள்ளது.
தமிழக அரசால் தொடங்கப்பட்ட 'நான் முதல்வன்' திட்டமானது, திறன் மேம்பாடு மூலம் மாணவர்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளது.
அந்த வகையில், நவக்கரை ஏ.ஜே.கே., கலை மற்றும் அறிவியல் கல்லுாரி இத்திட்டத்தின்கீழ், வேலை வாய்ப்பு அளிப்பதில், மாநிலத்தில் உள்ள, 766 கல்லுாரிகளில் நான்காம் இடத்தில் உள்ளது.
கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, மாவட்டங்களில் உள்ள பாரதியார் பல்கலை இணப்பு கல்லுாரிகளில் முதல் இடத்தையும் பிடித்துள்ளது.
கோவை பாரதியார் பல்கலையில் நேற்று நடந்த கருத்தரங்கில் பங்கேற்ற, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக நிர்வாக இயக்குனர் இன்னசென்ட் திவ்யா, ஏ.ஜே.கே., கலை அறிவியல் கல்லுாரியை பாராட்டி, அதன் செயலர் அஜித்குமார் லால் மோகனிடம் சாதனை சான்றிதழ் வழங்கினார்.
கல்லுாரி முதல்வர் ராஜூ, வேலைவாய்ப்பு இயக்குனர் பிரகாஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.