/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'காலையில் படித்தேன் 'சென்டம்' அடித்தேன்'
/
'காலையில் படித்தேன் 'சென்டம்' அடித்தேன்'
ADDED : மே 11, 2024 12:44 AM

கோவை;பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய செல்வபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர் கிஷோர், சமூக அறிவியலில் சென்டம் அடித்து, 500க்கு 485 மதிப்பெண் பெற்று அசத்தியுள்ளார்.
கோவை, தெலுங்குபாளையம் பகுதியைச் சேர்ந்த செல்வரத்தினம், அருந்ததி தம்பதியின் மகன் கிஷோர். இவர், செல்வபுரம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். ரிசல்ட் வெளியாகியுள்ள நிலையில், 500க்கு 485 மதிப்பெண் பெற்றும், சமூக அறிவிய லில் முழு மதிப்பெண் பெற்றும், பள்ளியில் முதலிடம் பிடித்துள்ளார்.
மாணவர் கிஷோர் கூறியதாவது:
அப்பா காய்கறி லோடு ஏற்றும் ஆட்டோ ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். அம்மா கூலி தொழிலாளி. சமூக அறிவியலில் சென்டம் பெற்றது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. அதிக மதிப்பெண் பெற உதவியாக இருந்த, எனது ஆசிரியர்கள் மற்றும் பெற்றோருக்கு நன்றி. கடந்த ஓராண்டாக கடினமாகப் படித்து வந்தேன். ஒரு மாதமாக காலையில் எழுந்து, படிப்பதை வழக்கமாக்கிக் கொண்டேன். அதன் பலனாக நல்ல மதிப்பெண் கிடைத்துள்ளது. பிளஸ் 1ல் கணிதத்துடன் கூடிய கணினி அறிவியல் பாடப் பிரிவைத் தேர்ந்தெடுக்க உள்ளேன்.
இவ்வாறு, அவர் கூறினார்.