/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மத்திய அமைச்சர்களை கூட்டி வந்து கோவையின் பிரச்னைகளை தீர்ப்பேன்! வாக்காளர்களுக்கு பா.ஜ., வேட்பாளர் நம்பிக்கை

ADDED : மார் 25, 2024 01:16 AM

கோவை;கிரடாய் அமைப்பு, கோவை லோக்சபா தொகுதி வேட்பாளர் அண்ணாமலையுடன் ஒரு நேர்காணல் நிகழ்ச்சியை, நேற்று தாஜ் விவாந்தா ஓட்டலில் நடத்தியது,
அதில் கட்டுனர் அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் நிர்வாகிகள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்து, பா.ஜ., கோவை தொகுதி வேட்பாளர் அண்ணாமலை பேசியதாவது:
உலகளாவிய தொழில்துறையோடு, போட்டியிட வேண்டிய சூழலில் நாம் இருக்கிறோம். நாம் சீனாவின் பொருளாதார வளர்ச்சியை, எட்டிப்பிடிக்க வேண்டுமென்றால், அடுத்து வரும் ஆண்டுகளில் 13.5 சதவீதமாக நம் உள்நாட்டு மொத்த உற்பத்தி விகிதம் இருக்க வேண்டும்.
அதற்கு, மத்தியில் ஆட்சி செய்யும் அரசு, வலுவாக இருக்க வேண்டும். அதில் அங்கம் வகிக்கும் எம்.பி.,க்கள், திறமையான, வேகமாக செயல்படும் வகையிலான, அறிவுக்கூர்மை மிகுந்தவர்களாக இருக்க வேண்டும். அப்படிப்பட்டவர்களை, வாக்காளர்களான நீங்கள் தேர்வு செய்ய வேண்டும்.
பலமான மத்திய அரசை, நாம் தேர்வு செய்தால், நம் நாடு எதிர்பார்த்த வளர்ச்சியை எட்டும். வளர்ச்சியடைந்த நகரங்களின் பட்டியலில், தமிழகத்தின் சென்னை, கோவை நகரங்கள் இடம் பெறாதது, வேதனையாக இருக்கிறது.
கோவை மீண்டும் உலக அளவில், அதிக வளர்ச்சியடைந்த நகரங்களில் ஒன்றாக மாறும். அதற்கான பணிகளை தற்போதே துவங்கிவிட்டேன்.
அப்படி மாறினால் இங்குள்ள தொழில், கல்வி, சுகாதாரம், வர்த்தகம் என்று பல்துறை வளர்ச்சியை எட்டிபிடிக்கும். மக்களுக்கு அதிக நன்மை பயக்கும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
கிரடாய் அமைப்புடன், சிபாகா, பில்டர்ஸ் அசோசியேசன் ஆப் இந்தியா ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்திய இந்நிகழ்ச்சியல், பொறியாளர்கள் திரளாக பங்கேற்றனர்.