ADDED : செப் 07, 2024 02:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சூலூர்;சூலூர் ஒன்றியம் அரசூர் ஊராட்சியில், சிறப்பு கிராம சபை கூட்டம் நேற்று நடந்தது. தற்காலிக தலைவராக பிரேமா தேர்வு செய்யப்பட்டார்.
மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்ட தணிக்கை அறிக்கை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு, அங்கீகரிக்கப்பட்டது.
2016- -- 2022 ஆண்டு பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் சமூக தணிக்கை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. சமூக தணிக்கை மாவட்ட அலுவலர் சுந்தர்ராஜன், வட்டார வள அலுவலர் பிரான்சிஸ் சேவியர், தணிக்கை குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், அடையாள அட்டை கோரிய தொழிலாளர்களுக்கு உடனடியாக, அட்டைகளை ஊராட்சி தலைவர் மனோன்மணி வழங்கினார்.
ஊராட்சி செயலர் கணேசமூர்த்தி, திட்ட ஒருங்கிணைப்பாளர் ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.