/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'நாம சங்கீர்த்தனம் கேட்டால் கஷ்டங்கள் தீரும்'
/
'நாம சங்கீர்த்தனம் கேட்டால் கஷ்டங்கள் தீரும்'
ADDED : பிப் 26, 2025 04:20 AM

கோவை; கோவை ராம்நகரில் உள்ள கோதண்டராமர் கோவிலில், பஜனோத்ஸவம் விழா நடந்து வருகிறது. இதை முன்னிட்டு, கவுதம் கண்ணன் மற்றும் விட்டல் நாராயணன் ஆகியோரின் 'பிரதோஷம் நாம சங்கீர்தனம்' நிகழ்ச்சி நேற்று நடந்தது.
இது குறித்து, கோதண்டராமர் கோவில் செயலாளர் விஸ்வநாதன் கூறுகையில், ''இந்த கலியுத்தில் வாழும் ஒவ்வொருவரும் பகவானின் நாம சங்கீர்த்தனத்தை கேட்க வேண்டும். அப்போதுதான் கஷ்டங்கள் தீரும். மகிழ்ச்சியாக வாழவேண்டும் என்று நினைப்பவர்களுக்கு, நாம சங்கீர்த்தனம் கேட்பதுதான் சிறந்த வழி. இங்கு மார்ச் 2ம் தேதி வரை, இந்த பஜனை நடக்கிறது. பக்தர்கள் அனைவரும் வந்து கேட்டு, பகவானின் அருளை பெறலாம்,'' என்றார்.

