/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'நாம ஜெபம் செய்தால் நல்வழி பிறக்கும்'
/
'நாம ஜெபம் செய்தால் நல்வழி பிறக்கும்'
ADDED : மார் 02, 2025 10:55 PM
அன்னுார்,; 'கிருஷ்ண நாம ஜெபம் செய்தால் நல்வழி பிறக்கும்' என, பகவத் கீதை சொற்பொழிவில் தெரிவிக்கப்பட்டது.
அன்னுார் கரிவரதராஜ பெருமாள் கோவில் வளாகத்தில், 'ஹரே கிருஷ்ணா' இயக்கம் சார்பில், நேற்று முன்தினம் இரவு, 'கீதை காட்டும் பாதை' என்னும் தலைப்பில் சொற்பொழிவு நடந்தது.
இஸ்கான் இயக்க நிர்வாகி சரவணன் பேசுகையில், ''ஹரே கிருஷ்ணா, ஹரே ராமா நாமத்தை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் உச்சரிக்க வேண்டும். தொடர்ந்து நாம ஜெபம் செய்வதால் நல்வழி பிறக்கும். நல்ல எண்ணங்கள் உருவாகும். தீய எண்ணங்கள் அகலும்,'' என்றார்.
இதையடுத்து, பகவத் கீதை கீர்த்தனைகள் பாடப்பட்டன. பஜனை நடந்தது. வரும் 8ம் தேதி மாலை 6:00 மணிக்கு, இஸ்கான் இயக்க மூத்த நிர்வாகி, ஹேமாங்கி ராதா தேவி பகவத் கீதை குறித்து பேசுகிறார்.
பக்தர்கள் பங்கேற்று, கிருஷ்ணர் அருள் பெற, நிர்வாகிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.