/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மின்கம்பங்களை மாற்றினால் ரோடு விரிவாக்கம் செய்யலாம்!
/
மின்கம்பங்களை மாற்றினால் ரோடு விரிவாக்கம் செய்யலாம்!
மின்கம்பங்களை மாற்றினால் ரோடு விரிவாக்கம் செய்யலாம்!
மின்கம்பங்களை மாற்றினால் ரோடு விரிவாக்கம் செய்யலாம்!
ADDED : ஆக 26, 2024 01:41 AM

பொள்ளாச்சி;பொள்ளாச்சி நகரில், மகாலிங்கபுரம் ரவுண்டானாவில் இருந்து, கோவை ரோடு சந்திப்பு வரையிலான சாலையில், இடதுபுறம் உள்ள மின் கம்பங்களை அகற்றி மாற்றியமைக்க வேண்டும்.
பொள்ளாச்சி நகரில் வாகனங்களின் இயக்கம், நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல இடங்களில், ஆக்கிரமிப்புகள் அகற்றி, ரோடு விரிவாக்கம் மற்றும் ரவுண்டானா அமைத்து, நெரிசலுக்கு தீர்வு காணப்பட்டு வருகிறது.
இருப்பினும், சில பகுதிகளில், முழுமையாக மாற்றியமைக்கப்படாத மின்கம்பங்களால், சீரான போக்குவரத்தும் தடைபடுகிறது. அவ்வகையில், மகாலிங்கபுரம் ரவுண்டானாவில் இருந்து, கோவை ரோடு சந்திப்பு வரையிலான சாலையில், இடதுபுறமாக உள்ள மின் கம்பங்களை அகற்றி, மாற்றியமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.
தன்னார்வலர்கள் கூறியதாவது:
பல இடங்களில், சாலையை அகலப்படுத்தி சென்டர்மீடியன் அமைக்கப்பட்டு, போக்குவரத்துக்கு வழிவகை செய்யப்பட்டு வருகிறது. மகாலிங்கபுரத்தில், சாலையோரத்தில் அமைந்துள்ள மின்கம்பங்களை உள்பகுதிக்கு அகற்றி மாற்றியமைக்க வேண்டும்.
இப்பகுதியில், வணிகக்கடைகள் பெருகி வரும் நிலையில், போக்குவரத்தும் அதிகரிக்கிறது. மின் கம்பங்கள் இடமாற்றம் செய்யும் பட்சத்தில் சாலையை 4 முதல் 5 அடி துாரத்திற்கு விரிவாக்கமும் செய்ய முடியும்.
இவ்வாறு, கூறினர்.