/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'பகவான் நாமத்தை சொன்னால் பவித்ரம்'
/
'பகவான் நாமத்தை சொன்னால் பவித்ரம்'
ADDED : மார் 28, 2024 03:43 AM
கோவை : ராம்நகர் கோதண்ட ராமர் கோவிலில், 'உயர்ந்த பக்தி எது' என்ற தலைப்பில் 'அபங்க சங்கீர்த்தன ஹரிகதை' என்ற ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது.
இதில், பங்கேற்ற ஆன்மிக சொற்பொழிவாளர் ஸ்ரீரகுநாத்தாஸ் மஹராஜ் பேசியதாவது:
மனித உடம்பு அசுத்தமானது. அதை நாம் குளித்து சுத்தம் செய்தாலும், மறுபடியும் அசுத்தமாகும். ஆனால் பகவான் நாமத்தை சொன்னால், கீர்த்தனங்களை பாடினால் நம் தேகம் பவித்ரமாக மாறிவிடும்.
ஞானிகள், சாதுக்கள் உடம்பு பவித்ரமாக இருக்கிறது என்றால், அதற்கு அவர்கள் பகவான் நாமத்தை சதா சொல்லிக்கொண்டே இருப்பதுதான் காரணம். நம் உள்ளத்தில் பகவான் பற்றிய சிந்தனையும், பிரார்த்தனையும் இருக்கும் போது தேகம் ஆரோக்கியமாக இருக்கும்.
இவ்வாறு, அவர் பேசினார்.