/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இளங்கோ மெட்ரிக் பள்ளி ஆண்டு விழா
/
இளங்கோ மெட்ரிக் பள்ளி ஆண்டு விழா
ADDED : பிப் 27, 2025 12:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: சிவானந்தபுரம், இளங்கோ மெட்ரிக் பள்ளியின் ஆண்டு விழா, பள்ளி வளாகத்தில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. கோவை மாவட்ட முன்னாள் முதன்மை கல்வி அலுவலர் கீதா விழாவிற்கு, தலைமை வகித்தார்.
முதல் மதிப்பெண் எடுத்த மாணவர்கள், பொதுத் தேர்வில் சாதனை படைத்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. பார்வையாளர்களை கவரும் வகையில் மாணவர்கள் பல்வேறு கலைநிகழ்வுகளை நிகழ்த்தினர். பள்ளியின் தாளாளர் மாணிக்கம், செயலாளர் செந்தில்குமார், முதல்வர் ராமப்ரியா மற்றும் ஆசிரியர்கள் விழாவில் பங்கேற்றனர்.