/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கூரியரில் சட்டவிரோத பொருட்கள்இருவரிடம் ரூ. 60 லட்சம் மோசடி
/
கூரியரில் சட்டவிரோத பொருட்கள்இருவரிடம் ரூ. 60 லட்சம் மோசடி
கூரியரில் சட்டவிரோத பொருட்கள்இருவரிடம் ரூ. 60 லட்சம் மோசடி
கூரியரில் சட்டவிரோத பொருட்கள்இருவரிடம் ரூ. 60 லட்சம் மோசடி
ADDED : ஆக 27, 2024 10:38 PM
கோவை;கூரியரில் சட்டவிரோத பொருட்கள் வந்திருப்பதாக கூறி கோவையை சேர்ந்த இருவரிடம் ரூ. 60 லட்சம் மோசடி செய்தவர்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
கோவை, சூலுார் பகுதியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன், 75, முன்னாள் வங்கி அலுவலர். இவருக்கு கடந்த, 20ம் தேதி தெரியாத எண்ணில் இருந்து அழைப்பு வந்தது. அதில், பேசியவர் மும்பையில் உள்ள கூரியர் நிறுவன அலுவலகத்தில் இருந்து அழைப்பதாக தெரிவித்துள்ளார். கோபாலகிருஷ்ணன் ஆதார் அட்டையை பயன்படுத்தி சட்டவிரோதமாக பொருட்கள் பார்சல் வந்துள்ளதாக தெரிவித்தார். இதனால் பார்சல் மும்பை போலீசில் ஒப்படைக்கப்பட்டுள்ளதால், அதிகாரியிடம் பேசுமாறும் தெரிவித்து, அழைப்பை வேறு ஒருவருக்கு இணைத்துள்ளார்.
பின்னர், பேசிய நபர் கோபாலகிருஷ்ணனில் அதார் எண் உள்ளிட்டவையை தெரிவித்து, போதை பொருட்கள் உள்ளிட்ட சட்ட விரோத பொருட்களை கடத்தியுள்ளதாக மிரட்டினார். தொடர்ந்து, வாட்ஸ் ஆப் வீடியோ காலில் போலீஸ் உடை அணிந்து பேசி, வழக்கில் இருந்து தப்பிக்க, கோபாலகிருஷ்ணன் வங்கி கணக்கை ஆய்வு செய்ய வேண்டும் என கூறி வங்கிக்கணக்கில் இருக்கும் பணத்தை அனுப்ப கூறியுள்ளார். இதனால், கோபாலகிருஷ்ணன் நடந்த 22ம் தேதி ரூ. 5 லட்சம், 23ம் தேதி ரூ. 30 லட்சம் என மொத்தம் 35 லட்சம் அனுப்பியுள்ளார்.
பின்னர் அந்த கும்பலை தொடர்பு கொள்ள முடியாததால், கோபாலகிருஷ்ணன், கோவை மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் உள்ள மாவட்ட சைபர் கிரைம் போலீசிஸ் புகார் அளித்தார்.
இதேபோல், மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த பிராங்கிளின், 43 ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவருக்கு கடந்த 19ம் தேதி தெரியாத எண்ணில் இருந்து அழைப்பு வந்தது. அதில் பேசியவர், கூரியர் நிறுவனத்தில் இருந்து பேசுவதாக கூறியுள்ளார்.
பின்னர் உங்களுக்கு வந்த பார்சலில் போதைபொருட்கள் இருப்பதால், உங்கள் அழைப்பு டில்லி போலீசிஸ் அதிகாரிக்கு இணைப்படுவதாக கூறியுள்ளார். போலீஸ் அதிகாரி என தெரிவித்து பேசிய நபர், போதை பொருள் கடத்தலுக்காக உங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும், வழக்கில் இருந்து வெளிவர வங்கி அதிகாரிகள் உங்களை வங்கி கணக்குகளை ஆய்வு மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தனர்.
இதனால், தனது வங்கி கணக்கில் இருந்து ரூ. 25 லட்சத்தை மோசடி நபர் சொன்ன கணக்கிற்கு அனுப்பியுள்ளார். பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பிராங்கிளின் கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.