/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சட்ட விரோதமாக மண் கடத்தல்...வாகனங்கள் பறிமுதல்!தொடர் கண்காணிப்பு அவசியம்
/
சட்ட விரோதமாக மண் கடத்தல்...வாகனங்கள் பறிமுதல்!தொடர் கண்காணிப்பு அவசியம்
சட்ட விரோதமாக மண் கடத்தல்...வாகனங்கள் பறிமுதல்!தொடர் கண்காணிப்பு அவசியம்
சட்ட விரோதமாக மண் கடத்தல்...வாகனங்கள் பறிமுதல்!தொடர் கண்காணிப்பு அவசியம்
ADDED : ஜூலை 29, 2024 02:51 AM

அன்னுார்:அன்னுார் அருகே சட்டவிரோதமாக மண் கடத்திய, மூன்று லாரிகள், ஒரு பொக்லைன்
இயந்திரம் பறிமுதல் செய்யப்பட்டது. மாவட்ட அதிகாரிகள், அக்கரை
செங்கப்பள்ளி, குப்பனுார் ஊராட்சியில் ஆய்வு செய்து, தொடர்ந்து கண்காணிக்க
வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.
அன்னுார் அருகே அக்கரை செங்கப்பள்ளியில், தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான நிலத்தில் அனுமதியின்றி, மண் எடுத்து கடத்துவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.
நேற்று அதிகாலையில் அங்கு அனுமதி இன்றி மண் எடுத்துக் கொண்டிருந்த லாரிகளை கிராம மக்கள் சிறை பிடித்தனர். வருவாய் துறை மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
கிராம நிர்வாக அலுவலர் வேணுகோபால், போலீஸ் இன்ஸ்பெக்டர் நித்யா ஆகியோர் அங்கு சென்று ஆய்வு செய்தனர். முறையான அனுமதி இல்லாதது கண்டறியப்பட்டது.
இதையடுத்து வி.ஏ.ஓ., புகாரின் பேரில், டிப்பர் லாரிகள் மற்றும் பொக்லைன் இயந்திரங்களின் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மூன்று லாரிகள் மற்றும் ஜே.சி.பி., இயந்திரம் பறிமுதல் செய்யப்பட்டு அன்னுார் போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு செல்லப்பட்டது.
இது குறித்து நமது நிலம் நமதே அமைப்பின் நிர்வாகிகள் கூறுகையில், 'அக்கரை செங்கப்பள்ளி மற்றும் குப்பனுார் ஊராட்சிகளில் பல மாதங்களாக சட்ட விரோதமாக விடிய விடிய மண் கடத்தப்படுகிறது. பலமுறை வருவாய்த்துறை மற்றும் கனிமவளத் துறையில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. பல இடங்களில், 15 அடி ஆழம் வரை தோண்டி மண் எடுத்துள்ளனர். இதனால் நீர்வழிப்பாதை மறைந்து விட்டது. மாவட்ட அதிகாரிகள், அக்கரை செங்கப்பள்ளி மற்றும் குப்பனுார் ஊராட்சியில் ஆய்வு செய்து, தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்,'' என்றனர்.