/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பாடம் நடத்த நான் ஒன்றும் வாத்தியார் இல்லை! தி.மு.க.,வினரை வறுத்தெடுத்த பூச்சி முருகன்
/
பாடம் நடத்த நான் ஒன்றும் வாத்தியார் இல்லை! தி.மு.க.,வினரை வறுத்தெடுத்த பூச்சி முருகன்
பாடம் நடத்த நான் ஒன்றும் வாத்தியார் இல்லை! தி.மு.க.,வினரை வறுத்தெடுத்த பூச்சி முருகன்
பாடம் நடத்த நான் ஒன்றும் வாத்தியார் இல்லை! தி.மு.க.,வினரை வறுத்தெடுத்த பூச்சி முருகன்
ADDED : மார் 28, 2024 11:11 PM
பொள்ளாச்சி:ஆரம்பமே இங்கு தகராறாக இருக்குது; பாடம் நடத்த நான் ஒன்றும் வாத்தியார் இல்லை, என கட்சி நிர்வாகிகளிடம் ஆவேசமாக பேசினார் தி.மு.க., தலைமை நிலையச் செயலாளர் பூச்சி முருகன்.
பொள்ளாச்சியில், தி.மு.க., தேர்தல் அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் தேர்தல் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.அதில் தலைமை நிலைய செயலாளர் பூச்சி முருகன் பேசியதாவது:
பொள்ளாச்சியில் அவ்வளவு பெரிய சம்பவம் நடந்தும், சட்டசபை தேர்தலில் அவர்கள் வெற்றி பெற்றார்கள். இங்கு ஆரம்பமே பிரச்னையாக இருக்கிறது.பாடம் நடத்த நான் ஒன்றும் வாத்தியார் இல்லை. எனக்கு தெரிஞ்சதை சொல்கிறேன்; உங்களுக்கு தெரிஞ்சதை சொல்லுங்க.
கட்சியினருக்கு, முதலில் ஒழுக்கம் இருக்க வேண்டும்; ஒழுக்கம், கட்டுப்பாடு இருக்கணும். இங்கு உள்ளாட்சி பிரதிநிதிகள் தனியாக இருக்காங்க. கட்சி நிர்வாகிகள் தனியாக இருக்காங்க. கட்சி நிர்வாகிகள் தான் உங்களை ஜெயிக்க வைக்க பாடுபட்டாங்க. அவங்க குறைகளை கேட்டு சரி பண்ணி ஒற்றுமையாக வேலை செய்யணும்.
இங்கு, பூத் கமிட்டி பொறுப்பாளர் பணியை சரியாக செய்யவில்லை. அனைவரும் ஒன்றாக சேர்ந்து கட்சிப்பணியை செய்தால் தான் வெற்றியை பெற முடியும். தேர்தல் நெருங்கும் நிலையிலும், இதை புரிந்து கொள்ளாமல் அலட்சியமாக இருக்க வேண்டாம்.
இவ்வாறு, கடிந்து கொண்டார்.
கட்சி நிர்வாகிகள் கூறுகையில், 'தேர்தல் பணியில் ஒற்றுமையாக வேலை செய்ய வேண்டும்; கட்சிக்கு அடிப்படையே பொறுப்பில் உள்ளவர்கள் தான். இதை அனைவரும் உணர வேண்டும். ஒரு நிர்வாகி போகும் போது மூன்று பேர் மட்டுமே கட்சியினர் வருகின்றனர்.
பூத் கமிட்டி பொறுப்புக்கு நியமித்தவங்க பணியை சரியாக செய்யவில்லை என்ற கோபமும் தான் பூச்சி முருகன் பேச்சில் தென்பட்டது. அவர் கோபமாக பேசினாலும் நியாயத்தை தான் சொல்லி இருக்கார்,' என்றனர்.
தேர்தல் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில், தலைமை நிலைய செயலாளர், நிர்வாகிகளை வறுத்தெடுத்துக்கொண்டு இருந்தார். இதை போட்டோ, வீடியோ எடுத்துக்கொண்டு இருந்த நிருபர்களை கண்ட நகர நிர்வாகி ஒருவர், 'இன்டோர் மீட்டிங்' எனக்கூறி அவசர அவசரமாக வெளியேற்றினார்.

