/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோர்ட் புறக்கணிப்பு விசாரணை பாதிப்பு
/
கோர்ட் புறக்கணிப்பு விசாரணை பாதிப்பு
ADDED : ஜூலை 30, 2024 11:14 PM
கோவை;வக்கீல்கள் தொடர்ந்து கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபட்டு வருவதால், வழக்கு விசாரணை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக வக்கீல்கள் கடந்த ஒரு மாதமாக கோர்ட் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வக்கீல் சங்க கூட்டுக்குழு சார்பில் (ஜேக்), டில்லி ஜந்தர் மந்தில் ஆர்ப்பாட்டம் மற்றும் பொதுக்கூட்டம் நடந்தது.
இதில், ஆக., 3 வரை கோர்ட் புறக்கணிப்பு போராட்டத்தை தொடர்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஜேக் வேண்டுகோள் படி, கோவையில், அனைத்து நீதிமன்றங்களை புறக்கணிக்க கோவை வக்கீல் சங்கம் முடிவு செய்துள்ளது.
வக்கீல்கள் தொடர்ந்து புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், நீதிமன்றங்களில் வழக்கு விசாரணை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.