/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கூடுதல் அபராதம் விதிப்பு; அரசாணைக்கு கோர்ட் தடை
/
கூடுதல் அபராதம் விதிப்பு; அரசாணைக்கு கோர்ட் தடை
ADDED : மே 30, 2024 05:02 AM
கோவை : ரேஷன்கடைகளில் உணவு பொருட்கள் இருப்பை, முறையாக கடைப்பிடிக்காத ரேஷன் கடை ஊழியர்களுக்கு, அபராத தொகையை இரட்டிப்பாக்கி, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை கமிஷனர் வெளியிட்ட அரசாணைக்கு, சென்னை உயர்நீதி மன்றம் தடை விதித்துள்ளது.
இது குறித்து, தமிழ்நாடு அரசு ரேஷன்கடை பணியாளர் சங்கத் தலைவர் ராஜேந்திரன் கூறி இருப்பதாவது:
தமிழக ரேஷன் கடைகளில், உணவு பொருட்களின் இருப்பு குறைவாக இருந்தால், கடை ஊழியர்களுக்கு அபராத தொகை இரட்டிப்பாக விதிக்கப்படும் என, அரசாணை வெளியிடப்பட்டு இருந்தது.
இந்த அரசாணைக்கு தடை கோரி, தமிழ்நாடு அரசு ரேஷன்கடை பணியாளர்கள் சங்கம் சார்பில், சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், இந்த அரசாணைக்கு எட்டு வார காலம் தடை விதித்துள்ளார்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.