/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
முறையற்ற குடிநீர் வினியோகம்: சாலை மறியலால் பரபரப்பு
/
முறையற்ற குடிநீர் வினியோகம்: சாலை மறியலால் பரபரப்பு
முறையற்ற குடிநீர் வினியோகம்: சாலை மறியலால் பரபரப்பு
முறையற்ற குடிநீர் வினியோகம்: சாலை மறியலால் பரபரப்பு
ADDED : மார் 22, 2024 02:33 AM

கோவை;தண்ணீர் விடாததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் ஷோபா நகரில், 700க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. மாநகராட்சி, 28 வது வார்டுக்கு உட்பட்ட இப்பகுதிகளில் குடிநீர் வினியோகம் முறையாக செய்யப்படவில்லை என, புகார் தெரிவிக்கப்பட்டு வந்தது.
மேலும், 15 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் விடப்படுவதாகவும், மிகவும் குறைந்தளவு தண்ணீர் விடுவதால் பெண்கள் கடும் அவதிக்குள்ளாவதாக புகார் கூறப்பட்டது.
இந்நிலையில், குடிநீர் வினியோகம் முறையாக மேற்கொள்ள வலியுறுத்தி நேற்று அப்பகுதியை சேர்ந்தவர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு வந்த பீளமேடு போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்நிலையில், அப்பகுதிக்கு உடனடியாக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

