/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தமிழக அரசு ஒதுக்கிய இழப்பீட்டு தொகையில்...இப்படி பண்றீங்களே! வெட்டிய தென்னைகளுக்கு உரம் கொடுக்கறாங்க
/
தமிழக அரசு ஒதுக்கிய இழப்பீட்டு தொகையில்...இப்படி பண்றீங்களே! வெட்டிய தென்னைகளுக்கு உரம் கொடுக்கறாங்க
தமிழக அரசு ஒதுக்கிய இழப்பீட்டு தொகையில்...இப்படி பண்றீங்களே! வெட்டிய தென்னைகளுக்கு உரம் கொடுக்கறாங்க
தமிழக அரசு ஒதுக்கிய இழப்பீட்டு தொகையில்...இப்படி பண்றீங்களே! வெட்டிய தென்னைகளுக்கு உரம் கொடுக்கறாங்க
ADDED : ஜூன் 28, 2024 11:49 PM

பொள்ளாச்சி;'வெட்டப்பட்ட தென்னை மரங்களுக்கு எவ்விதமான உள் ஒதுக்கீடு இல்லாமல், முழுமையாக விவசாயிகள் வங்கி கணக்கில் ரொக்கத்தொகை வரவு வைக்க வேண்டும்,' என தென்னை விவசாயிகள் வலியுறுத்தினர்.
பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக தென்னை மரத்தில் புதிய, புதிய நோய் தாக்குதல்கள், தேங்காய்க்கு விலை சரிவு, கொப்பரை கொள்முதல் செய்தாலும் உரிய பலன் இல்லை போன்ற காரணங்களினால் விவசாயிகள் திண்டாடுகின்றனர்.
இந்நிலையில், கேரளா வேர் வாடல் நோயால் அதிகம் பாதிப்பு ஏற்பட்டதால், தென்னை மரங்களை வெட்டி அகற்றினர். வேர்வாடல் நோய்க்கு மருந்து கண்டறிய வேண்டும்; மரங்களை வெட்டுவதற்கு இழப்பீடு வழங்க வேண்டும், தேங்காய் கொள்முதல் செய்து ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வினியோகிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் பொள்ளாச்சி வந்த முதல்வர் ஸ்டாலின், 'பொள்ளாச்சி பகுதியில் வேர் வாடல் நோய் பாதித்த மரங்களை வெட்டி அகற்றுவதற்காக, 14 கோடியே, நான்கு லட்சம் ரூபாய் நிதி வழங்கப்படும்.மூன்று லட்சம் தென்னங்கன்றுகள், 2 கோடியே, 80 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் இலவசமாக வழங்கப்படும்,' என அறிவித்தார்.
இதன்படி, விவசாயிகளுக்கு மரங்களை வெட்ட ஒரு ெஹக்டேருக்கு, 32 மரங்களுக்கு தலா, ஆயிரம் ரூபாய் வீதம், மொத்தம், 32 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். ஒரு விவசாயிக்கு அதிக பட்சம், 32 மரங்களுக்குத்தான் வழங்க முடியும்.
மேலும், தென்னை மரக்கன்றுகள், 40 - 80 எண்கள் வழங்கப்படுகிறது. நோய் தாக்கப்படாத மரங்களை காப்பாற்ற ஊட்டச்சத்துகள், டானிக், நுண்ணுயிர் உரங்கள் வழங்கப்படுவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், வெட்டப்பட்ட மரங்களுக்கு வழங்கும் இழப்பீடு தொகையில், பாதி தொகைக்கு உரங்களாக வழங்கப்படுவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவித்ததால் விவசாயிகள் அதிருப்தி அடைந்தனர்.
உரம் வேண்டாம்!
விவசாயி பத்மநாபன் கூறியதாவது:
தமிழக அரசு, நோய் பாதிக்கப்பட்ட மரங்களை வெட்டி அகற்ற ஒரு ெஹக்டேருக்கு, 32,000 ரூபாய் வழங்குவதாக அறிவித்தது. பாதி பேருக்கு முழு தொகை ரொக்கமாவும், கூடுதலாக, 8,750 ரூபாய்க்கு உரம் உள்ளிட்ட 'கிட்' வழங்கப்பட்டது.
இந்நிலையில், 32 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்குவதில், 12 - 13 ஆயிரம் ரூபாய்க்கு உரமாக வழங்குவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அவ்வாறு வழங்கினால் அது விவசாயிகளுக்கு பயன் அளிக்காது; வெட்டிய மரத்துக்கு உரம் வழங்கி எந்த பலனும் கிடைக்காது. அரசு ஒதுக்கீடு செய்தது போல இழப்பீடும், கூடுதலாக உரம் உள்ளிட்ட, 'கிட்' வழங்குவதை ஏற்றுக்கொள்கிறோம்.
பெரும்பாலான விவசாயிகளிடம் ஆவணங்கள் மட்டும் பெறப்பட்டுள்ளது. இன்னும், இழப்பீடு வழங்கவில்லை. வெட்டப்பட்ட மரங்களுக்கு முழு இழப்பிட்டை வங்கி கணக்கில் வழங்க வேண்டும். இது குறித்து விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்திலும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு, அவர் கூறினார்.
திருப்பி அனுப்பியாச்சு!
தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
நோய் தாக்கிய மரங்களை வெட்ட வழங்கப்படும் இழப்பீடு தொகையில், உரம் வழங்குவதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதனால், அந்த உரம் வேண்டாம் என திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.
தற்போது, தோட்டக்கலைத்துறை அலுவலகத்தில் இருப்பு வைத்துள்ளவை, 8,750 ரூபாய்க்கு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய உரம் மற்றும் தென்னை கிட் மட்டுமே உள்ளது.
இவ்வாறு, கூறினர்.