/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இரண்டே மாதங்களில் பள்ளமானது புதிய ரோடு! சரி செய்யப்படுமா... ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை பாயுமா?
/
இரண்டே மாதங்களில் பள்ளமானது புதிய ரோடு! சரி செய்யப்படுமா... ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை பாயுமா?
இரண்டே மாதங்களில் பள்ளமானது புதிய ரோடு! சரி செய்யப்படுமா... ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை பாயுமா?
இரண்டே மாதங்களில் பள்ளமானது புதிய ரோடு! சரி செய்யப்படுமா... ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை பாயுமா?
ADDED : மார் 25, 2024 01:05 AM

குழியில் சிக்கும் வாகனங்கள்
சுந்தராபுரம் - மதுக்கரை மார்க்கெட் ரோடு, பேஸ் - 2 குடியிருப்பு பகுதியில், டீ மேட் பேக்கரி முன்பு சாலையில், ஒரு அடி நீளத்திற்கு குழி உள்ளது. வாகனங்கள் தட்டுத்தடுமாறி செல்கின்றன. புகார் செய்தபின், வெறும் மண் கொண்டு குழியை மூடினர். ஒரே வாரத்தில் மண் அடித்து செல்லப்பட்டு, மீண்டும் குழியாக மாறிவிட்டது.
- செல்வி, எட்டிமடை.
குடியிருப்பில் அசுர வேகம்
கோல்டுவின்ஸ், ஏழாவது வார்டு, துரைசாமி நகரில், குறுகலான சாலையில் அதிகளவில் கனரக வாகனங்கள் செல்கின்றன. சோதனையை தவிர்க்க, குடியிருப்பு பாதையில் செல்லும் இந்த வாகனங்களால், அடிக்கடி விபத்து நடக்கிறது.
- பிரகாஷ், கோல்டுவின்ஸ்.
வீணாகும் தண்ணீர்
பாலக்காடு மெயின் ரோடு, குனியமுத்துார் நெல்லை முத்து விலாஸ் கடை எதிரே, சாந்தி சிக்கன் கடை அருகே, மின்கம்பத்தின் அடியில் குடிநீர் குழாய் உடைந்து ஒரு வாரத்துக்கு மேல், தண்ணீர் வீணாகிறது.
- சேகர், குனியமுத்துார்.
கால்வாயை மூடிய கழிவுகள்
தெலுங்குபாளையத்தில், பிரதான வாய்க்கால் பல மாதங்களாக துார்வாரவில்லை. கழிவுகள், பிளாஸ்டிக் குப்பை நிரம்பி, புதர்மண்டி கிடக்கிறது. கழிவுநீர் தேங்கி நிற்பதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. மழைபெய்யும் போது, தண்ணீர் செல்ல முடியாதநிலையில் உள்ளது.
- கதிர்வேல், தெலுங்குபாளையம்.
சாலையில் இடையூறு
போத்தனுார், எம்.ஜி.ஆர்.நகர், புதிய வீதி விரிவாக்கத்தில், சாக்கடை கால்வாய் துார்வாரிய பின்பு, கழிவுகள் சாலையிலேயே விடப்பட்டுள்ளது. துர்நாற்றம் வீசுவதுடன், வாகனங்கள் செல்வதற்கும் இடையூறாக உள்ளது.
- சத்யநாராயணன், போத்தனுார்.
குப்பைமேடான ரிசர்வ் சைட்
குனியமுத்துார், 87வது வார்டு, கஸ்துாரி நகரில், ரிசர்வ் சைட்டில் பூங்கா அமைக்க பல ஆண்டுகளாக வலியுறுத்தியும் நடவடிக்கையில்லை. சிலர் கார்களை நிறுத்துவதுடன், கழிவுகளையும் வீசிச்செல்கின்றனர்.
- ஜெலினா, கஸ்துாரி நகர்.
சேதமடைந்த கம்பம்
கள்ளிமடை, 61வது வார்டு, திருநகர், சென்ட்ரல் ஸ்டூடியோ அருகே, இரண்டாவது வீதியில் உள்ள, 'எஸ்.பி - 4, பி -2' என்ற எண் கொண்ட கம்பம், மோசமாக சேதமடைந்துள்ளது. கான்கிரீட் கம்பம் முழுவதும் விரிசல்களாக காணப்படுகிறது. சேதமடைந்த கம்பத்தை மாற்ற வேண்டும்.
- சத்யா, கள்ளிமடை.
அதிகரிக்கும் விபத்துகள்
ஜி.சி.டி., கல்லுாரி முதல், இடையர்பாளையம் வரை போடப்பட்ட புதிய தார் சாலை தரமின்றி உள்ளது. இரண்டு மாதங்களுக்கு முன்பு போடப்பட்ட இந்த சாலையில், ஆங்காங்கே பள்ளம் ஏற்பட்டுள்ளது. ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- செல்வி, இடையர்பாளையம்.
அடிப்படை வசதிகளின்றி தவிப்பு
பேரூர், தாளியூர், கலிக்கநாயக்கன்பாளையம், சி.பி.சி., கார்டன், பேஸ் - 3 குடியிருப்பு பகுதியில், கடந்த இரண்டு ஆண்டுகளாக, அடிப்படை வசதிகள் அமைக்க முறையிட்டும் நடவடிக்கையில்லை. குழாய் அமைத்த பின்னரும், தண்ணீர் விநியோகிக்கவில்லை. தெருவிளக்கு மற்றும் சாலை வசதிகளின்றி மக்கள் தவிக்கின்றனர்.
- சங்கர், பேரூர்.
அடிக்கடி காய்ச்சல்
மதுக்கரை, 17வது வார்டு, மிலிட்டரி கேம்ப் எதிர்புறம், ஐந்தாவது வீதியில், சாக்கடை வசதியில்லை. இதனால், வீடுகளிலிருந்து திறந்தவெளியில் கழிவுநீர் விடப்படுகிறது. சுகாதாரமின்மையால் குழந்தைகளுக்கு அடிக்கடி காய்ச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன.
- சதீஷ், மதுக்கரை.

