/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
முன்னாள் மாணவர்கள் அறக்கட்டளை துவக்கம்
/
முன்னாள் மாணவர்கள் அறக்கட்டளை துவக்கம்
ADDED : மே 28, 2024 11:21 PM
பொள்ளாச்சி:பொள்ளாச்சி என்.ஜி.எம்., கல்லுாரி பேராசிரியர் பெயரில் முன்னாள் மாணவர்கள், அறக்கட்டளை துவக்கினர்.
பொள்ளாச்சி என்.ஜி.எம்., கல்லுாரி முதல்வராக இருந்தவர் முத்துக்குமரன். இவர், 30 ஆண்டுகளுக்கு முன்னதாக வரலாற்றுத்துறை விரிவுரையாளராக பணியில் சேர்ந்து, துறை தலைவராக, முதன்மையராக, தேர்வு கட்டுப்பாட்டு நெறியாளராக பணியாற்றி, முதல்வராக பொறுப்பேற்று ஓய்வு பெற்றார்.
இவரது பணி நிறைவு நாளில், அவரிடம் படித்த முன்னாள் மாணவர்கள், ஒரு லட்சம் ரூபாய் வைப்பு நிதி உருவாக்கி பேராசிரியர் முத்துக்குமரன் என்ற பெயரில் அறக்கட்டளை துவக்கினர். இதில், முதல்வர் (பொ) மாணிக்கச்செழியன், பேராசிரியர்கள், மேலாளர் ரகுநாதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.