/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கணினிதுறைகளின் சங்கம் துவக்கம்
/
கணினிதுறைகளின் சங்கம் துவக்கம்
ADDED : ஆக 31, 2024 01:35 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை:தொண்டாமுத்துார், ஸ்ரீ சாய் ரங்கநாதன் பொறியியல் கல்லுாரியில், கணினி சம்பந்தப்பட்ட துறைகளின் சங்கம் 'டிரேடிக்' துவக்க விழா நடந்தது.
ஆக்சென்சர் சொல்யூசன்ஸ் இணைமேலாளர் ரோகினி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். கணினிதுறையின் மாணவர்களுக்கு மென்பொருள் துறையில் உள்ள பல்வேறு முன்னேற்றங்கள் மற்றும் வேலைவாய்ப்புகள் குறித்து அவர் பேசினார்.
பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு குறித்து புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. கல்லுாரி முதல்வர் ஞானமூர்த்தி, சி.எஸ்.இ., துறை தலைவர் சுதாகர், ஐ.டி., துறை தலைவர் மகேஸ்வரி மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.