/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பில்டர்ஸ் அசோசியேஷன் நிர்வாகிகள் பதவியேற்பு
/
பில்டர்ஸ் அசோசியேஷன் நிர்வாகிகள் பதவியேற்பு
ADDED : ஏப் 29, 2024 11:45 PM
கோவை:பில்டர்ஸ் அசோசியேஷன்ஆப் இந்தியாவின், புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா, அவிநாசி ரோடு, ரெசிடன்சி டவர்ஸ் ஓட்டலில் நடந்தது.
விருந்தினர்களாக,பில்டர்ஸ் அசோசியேசன் ஆப் இந்தியாவின், அகில இந்திய தலைவர் விஸ்வநாதன், சிறப்பு விருந்தினராக ஏ.வி., குரூப் நிறுவனங்களின் தலைவர் வரதராஜன், பில்டர்ஸ் அசோசியேசன் ஆப் இந்தியாவின் தமிழ்நாடு மாநில தலைவர் பழனிவேல் ஆகியோர், கலந்து கொண்டனர்.
பில்டர்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியாவின், அகில இந்திய முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணன்,புதிய தலைவராக லட்சுமணன், துணைத்தலைவராக ஜோசப், செயலாளர்பிரசாத் சக்ரவர்த்தி, பொருளாளர் ரங்கநாதன் மற்றும் இணை செயலாளர் சத்தியமூர்த்தி ஆகியோருக்கு, பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
விழா அமைப்பு தலைவர் கர்ணபூபதி, முன்னாள் தலைவர் கணேஷ்குமார் மற்றும் உறுப்பினர்கள் பலர் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

