/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநகராட்சி ஆரம்ப பள்ளியில் வகுப்பறை, கழிப்பறை துவக்கம்
/
மாநகராட்சி ஆரம்ப பள்ளியில் வகுப்பறை, கழிப்பறை துவக்கம்
மாநகராட்சி ஆரம்ப பள்ளியில் வகுப்பறை, கழிப்பறை துவக்கம்
மாநகராட்சி ஆரம்ப பள்ளியில் வகுப்பறை, கழிப்பறை துவக்கம்
ADDED : ஜூன் 20, 2024 05:37 AM
கோவை : மாநகராட்சி ஆரம்ப பள்ளியில், புதிய வகுப்பறை, கழிப்பறைகள் மாணவர்கள் பயன்பாட்டுக்கு துவக்கி வைக்கப்பட்டன.
கோவை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில், 148 பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் குறிப்பிட்ட இடைவெளியில், மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கோவை வெள்ளக்கிணறு மாநகராட்சி ஆரம்ப பள்ளியில், வகுப்பறைகள் கட்டித்தர வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து மாநகராட்சி சார்பில், ரூ.45 லட்சம் செலவில், புதிய வகுப்பறைகள், கழிப்பறைகள் கட்டப்பட்டன.
புதிதாக கட்டப்பட்ட வகுப்பறைகள், கழிப்பறைகள் நேற்று, மாணவர்கள் பயன்பாட்டுக்கு துவக்கி வைக்கப்பட்டன.
மாநகராட்சி மேயர் கல்பனா, புதிய வகுப்பறைகள், கழிப்பறைகளை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், வடக்கு மண்டல தலைவர் கதிர்வேல், மண்டல சுகாதார அலுவலர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.