/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரத்தினம் கல்வி குழுமத்தில் கால்பந்து மைதானம் திறப்பு
/
ரத்தினம் கல்வி குழுமத்தில் கால்பந்து மைதானம் திறப்பு
ரத்தினம் கல்வி குழுமத்தில் கால்பந்து மைதானம் திறப்பு
ரத்தினம் கல்வி குழுமத்தில் கால்பந்து மைதானம் திறப்பு
ADDED : ஜூலை 28, 2024 12:52 AM

கோவை;ரத்தினம் கல்வி குழுமத்தின் அங்கமான ரத்தினம் கோயம்புத்துார் எப்.சி.,யின் புதிய கால்பந்து மைதானம் நேற்று திறக்கப்பட்டது. பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் மகேஷ் பேசுகையில், ''மைதானமும், வகுப்பறையும் ஒன்று தான். தலைமைபண்பு, கூட்டு முயற்சி உள்ளிட்டவை கற்றுக்கொடுக்கிறது விளையாட்டு. பாடமும், உடற்கல்வியும் சேர்ந்ததே சிறந்த கல்வி முறை,'' என்றார்.
ரத்தினம் கல்வி குழும தலைவர் மதன் செந்தில் பேசுகையில், ''சர்வதேச தரத்தில் விளையாட்டு வீரர்களை உருவாக்க, இது போன்ற உலக தர மைதானங்கள் வேண்டும். இதன் மூலம், கோவை மட்டுமல்லாமல் சுற்றுப்பகுதிகளில் உள்ள இளைஞர்கள், இளம் வீரர்கள் தேசிய, சர்வதேச அளவில் சாதிக்க வேண்டும். ரத்தினம் கோயம்புத்துார் எப்.சி., அணியையும் உலக மேடைக்கு கொண்டு செல்ல வேண்டும்,'' என்றார்.
ரத்தினம் கல்வி குழும தலைவர் மதன் செந்தில், துணை தலைவர் நாகராஜ், முன்னாள் இந்திய கால்பந்து வீரர் ராமன் விஜயன், பொள்ளாச்சி எம்.பி., ஈஸ்வரசாமி ஆகியோர் உடனிருந்தனர்.