/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'மோதி மைண்ட் கேர்' மருத்துவமனை துவக்கம்
/
'மோதி மைண்ட் கேர்' மருத்துவமனை துவக்கம்
ADDED : ஏப் 18, 2024 05:16 AM

கோவை, : துடியலுாரில், மனநலம் தொடர்பான பல்வேறு சேவைகளை அளிப்பதற்காக, போதி மைண்ட் கேர் மருத்துவமனை துவக்கப்பட்டுள்ளது. சங்கரா கண் மருத்துவமனையின் நிறுவனர் டாக்டர் ரமணி பங்கேற்று, மருத்துவமனையின் லோகோவை வெளியிட்டார்.
மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் ராஜா நடராஜன் கூறுகையில், ''பொதுமக்களுக்கு எளிதான முறையில், உயர்தர மனநல சிகிச்சைகள் அளிப்பதே எங்கள் நோக்கம். மனநல மருத்துவத்தில் நிபுணத்துவம் பெற்ற முன்னணி பயிற்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான ஆக்ஸ்போர்டு சைக்கோர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, மனநலத் துறையில் திறமையான மற்றும் பயிற்சி பெற்ற பணியாளர்களை உருவாக்குவோம்,'' என்றார். போதி மைண்ட் கேர் மருத்துவமனையுடன், மாரிஸ் டே கேர் மையத்தை தொடங்குவதிலும் பெருமை கொள்வதாக, மருத்துவமனையின் இயக்குனர்கள் டாக்டர் வசந்தகுமார், டாக்டர் ஸ்ரீதேவி தெரிவித்தனர்.

