/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநில அளவிலான ஹாக்கி யு.ஐ.டி., கல்லுாரியில் துவக்கம்
/
மாநில அளவிலான ஹாக்கி யு.ஐ.டி., கல்லுாரியில் துவக்கம்
மாநில அளவிலான ஹாக்கி யு.ஐ.டி., கல்லுாரியில் துவக்கம்
மாநில அளவிலான ஹாக்கி யு.ஐ.டி., கல்லுாரியில் துவக்கம்
ADDED : மார் 28, 2024 03:36 AM
கோவை, : இன்ஜி., மாணவர்களுக்கான, மாநில அளவிலான ஹாக்கி போட்டி, பெரியநாயக்கன்பாளையம் யு.ஐ.டி., கல்லுாரியில் நடக்கிறது.
பெரியநாயக்கன்பாளையம் யுனைடெட் தொழில்நுட்ப கல்லுாரியின் (யு.ஐ.டி.,) உடற்கல்வித்துறை, முன்னாள் மாணவர்கள் ஸ்போர்ட்ஸ் சங்கம் சார்பில், இரண்டாம் ஆண்டு மாநில ஹாக்கி போட்டி நேற்று துவங்கி இன்று முடிகிறது.
போட்டியை, யு.ஐ.டி., கல்வி நிறுவனங்களின் தலைவர் சண்முகம் துவக்கி வைத்தார். முதல்வர் ராதாகிருஷ்ணன் மற்றும் உடற்கல்வித்துறை இயக்குனர் ரவிச்சந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.
இப்போட்டியில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து எட்டு அணிகள் பங்கேற்று லீக் மற்றும் நாக் அவுட் முறையில் போட்டியிடுகின்றன.
இதில், நேற்று நடந்த லீக் போட்டிகளில், யுனைடெட் கல்லுாரி அணி 1 - 0 என்ற கோல் கணக்கில் பி.பி.ஜி., அணியையும், ஸ்ரீ சக்தி இன்ஜி., மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி அணி 4 - 0 என்ற கோல் கணக்கில் செங்குந்தர் இன்ஜி., கல்லுாரி அணியையும், பாவை இன்ஜி., கல்லுாரி அணி 2 - 0 என்ற கோல் கணக்கில், யு.ஐ.டி., முன்னாள் மாணவர் அணியையும் வீழ்த்தின.