/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தீர்த்த காவடி விழா துவக்கம்; பழநிக்கு பாதயாத்திரை
/
தீர்த்த காவடி விழா துவக்கம்; பழநிக்கு பாதயாத்திரை
ADDED : மே 01, 2024 11:05 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை : உடுமலை நேரு வீதியில் காமாட்சியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் பக்தர்கள், ஸ்ரீ பழநி முருகன் தீர்த்த காவடி பாதயாத்திரை குழு என்ற பெயரில், ஆண்டுதோறும் பாதயாத்திரை சென்று வருகின்றனர்.
அவ்வகையில், இந்தாண்டுக்காக தீர்த்த காவடி விழா நேற்று கோவிலில், கணபதி ேஹாமத்துடன் துவங்கியது. சிறப்பு பூஜைகளுக்கு பிறகு, கந்தர் சஷ்டி பாராயணம் நடந்தது. இரவு மெய்யார் பூஜைக்கு பிறகு, தீர்த்தம் எடுத்து வர கொடுமுடிக்கு கிளம்பினர். இன்று மாலை 3:00 மணிக்கு, காமாட்சியம்மன் கோவிலுக்கு தீர்த்தம் எடுத்து வரும் பக்தர்கள், சிறப்பு பூஜைகளுக்கு பிறகு, பாதயாத்திரையை துவக்குகின்றனர்.

