தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்


ADDED : மே 11, 2026 09:01 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 11, 2026 09:01 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சேதமடைந்த மின்கம்பத்தால் ஆபத்து கோவை மாநகராட்சி, கோவைபுதுார், 91 வது வார்டு, காமாட்சி நகர், விசாலாட்சி அம்மன் கோவில் அருகில் மின்கம்பத்தின் ( எண்: 4) அடிப்பகுதி உடைந்து கம்பி துருபிடித்து வெளியில் தெரிகிறது. மின்கம்பம் கீழே விழும் நிலையில் இருப்பதால், அப்பகுதியினர் அச்சத்தில் உள்ளனர். மின் கம்பத்தை மாற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

–விட்டல் முருகன்: உயரம் பத்தல காட்டூர் காளீஸ்வரா மில் ரோட்டில் உள்ள பாதாள சாக்கடை மேனுவல் ரோட்டை விட உயரம் குறைவாக இருப்பதால் அடிக்கடி வாகனங்கள் விபத்தில் சிக்குகின்றன. இதைத்தவிர்க்க மேனுவலை உயர்த்தி அமைக்க வேண்டும்.

–சதாசிவம்: துர்நாற்றம் தாங்கல கோவை வ.உ.சி. மைதானத்துக்கு தினமும் பலர் வந்து செல்கின்றனர். மைதானத்தை சுற்றி ஏராளமான கடைகள் உள்ளன. இப்பகுதியில் மூட்டையில் கட்டி வீசப்பட்டுள்ள குப்பைகளால் துர்நாற்றம் வீசுகிறது. மாநகராட்சி அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

–பரமசிவம்: சுகாதார சீர்கேடு

கோவை காந்திபுரம் டவுன் பஸ் ஸ்டாண்ட்டுக்கு தினமும் பல ஆயிரம் பேர் வந்து செல்கின்றனர். பஸ் ஸ்டாண்ட்டுக்கு முன்புறம் உள்ள மாநகராட்சி கழிப்பிடத்திலிருந்து வெளியேறும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதை சரிசெய்ய வேண்டும்.

–விநாயகம், காந்திபுரம்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us