/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஈ மற்றும் கொசுக்கள் அதிகரிப்பு: சுகாதாரம் பாதிப்பால் கவலை
/
ஈ மற்றும் கொசுக்கள் அதிகரிப்பு: சுகாதாரம் பாதிப்பால் கவலை
ஈ மற்றும் கொசுக்கள் அதிகரிப்பு: சுகாதாரம் பாதிப்பால் கவலை
ஈ மற்றும் கொசுக்கள் அதிகரிப்பு: சுகாதாரம் பாதிப்பால் கவலை
ADDED : மே 26, 2024 11:16 PM
பொள்ளாச்சி:பொள்ளாச்சியில் மழையின் தாக்கம் உள்ளதால், நோய் பரப்பும் ஈக்கள் மற்றும் கொசுக்கள் அதிகரித்து, சுகாதாரம் பாதிக்கிறது.
பொள்ளாச்சி நகரில், அவ்வப்போது மழை பெய்து, தண்ணீர் தேக்கமடைகிறது. தேங்கியுள்ள தண்ணீரில், ஈக்கள் மற்றும் கொசுக்கள் அதிகமாக உற்பத்தியாகிறது. இவைகள், குடிநீர், தின்பண்டங்கள், உணவு வகைகள் மீது அதிகம் காணப்படுகிறது.
சில ஓட்டல்கள், தள்ளுவண்டிக்கடை களில் உணவு பொட்டலங்களை சாப்பிட்டு வெளியே வீசுவதாலும், பேக்கரிகள் மற்றும் டீக்கடைகளில், டீ மற்றும் காபி குடித்து விட்டு, பிளாஸ்டிக் டம்ளர்களை, அந்த இடத்திலேயே விட்டுச்செல்வதால் ஈக்கள் அதிகம் வலம் வருகின்றன.
இங்கு, உணவுப் பொருட்களை உட்கொள்வதால், டைபாய்டு, காலரா மற்றும் மலேரியா உள்ளிட்ட பல்வேறு நோய்கள் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, தள்ளுவண்டிகளில் விற்பனை செய்யும் உணவு வகைகளை பாதுகாக்கும் பொருட்டு, நான்கு பக்கமும் கண்ணாடி தடுப்புகள் அமைக்கவும், ஓட்டல்களில் மின்சார வலை அமைக்கவும் நடவடிக் கை என வலியுறுத்தப்பட்டுள்ளது.
மக்கள் கூறுகையில், 'சுகாதாரம் பேணாத ஓட்டல் மற்றும் தள்ளுவண்டி உரிமையாளர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு நடத்த வேண்டும்,' என்றனர்.

