/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஊட்டி சாலையில் மாடுகள் நடமாட்டம் அதிகரிப்பு; வாகன ஓட்டிகள் அவதி
/
ஊட்டி சாலையில் மாடுகள் நடமாட்டம் அதிகரிப்பு; வாகன ஓட்டிகள் அவதி
ஊட்டி சாலையில் மாடுகள் நடமாட்டம் அதிகரிப்பு; வாகன ஓட்டிகள் அவதி
ஊட்டி சாலையில் மாடுகள் நடமாட்டம் அதிகரிப்பு; வாகன ஓட்டிகள் அவதி
ADDED : ஜூன் 03, 2024 11:13 PM

மேட்டுப்பாளையம்;மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் சுற்றி திரியும் மாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்துள்ளனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வழியாக ஊட்டி செல்வது தான் பிரதான வழியாக உள்ளது. இதனால் மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் போக்குவரத்து அதிகம் காணப்படுகிறது. இச்சாலையில் மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளிலும், ஓடந்துறை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளிலும் மாடுகள் நடமாட்டம் அதிகம் உள்ளது. சாலையில் சுற்றி திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாக்குகின்றனர். கூட்டமாக வரும் மாடுகள், சாலையை ஆக்கிரமித்து படுத்துக் கொள்கிறது. வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி வரும் மாடுகளை பிடிக்க மேட்டுப்பாளையம் நகராட்சி மற்றும் ஓடந்துறை ஊராட்சி நிர்வாகங்கள் திணறி வருகின்றன.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், மாடுகளால் சாலைகளில் செல்லும் வாகனங்கள் மட்டும் அல்ல, சாலையில் நடந்து செல்வோரும் பாதிக்கப்படுகின்றனர். மாட்டின் உரிமையாளர்கள் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருகின்றனர். மாடுகளை பிடித்து கடும் அபராதம் விதிக்க வேண்டும், என்றனர்.
இதுகுறித்து மேட்டுப்பாளையம் நகராட்சி நிர்வாக அதிகாரி ஒருவர் கூறுகையில், சாலைகளில் சுற்றி திரியும் மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளை பிடிக்க ஒப்பந்ததாரர் நியமிக்கப்பட்டுள்ளார். பிடிக்கப்படும் மாடுகளின் உரிமையாளர்களிடம் இருந்து அபராதம் வசூலிக்கப்படும். தொடர்ந்து மாடுகளை சாலைகளில் சுற்றி திரிய விட்டால், பிடிக்கப்படும் மாடுகள் கோசாலைகளில் ஒப்படைக்கப்படும், என்றார்.