/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மின் வெட்டு அதிகரிப்பு பொதுமக்கள் பாதிப்பு
/
மின் வெட்டு அதிகரிப்பு பொதுமக்கள் பாதிப்பு
ADDED : ஜூலை 20, 2024 12:29 AM
பொள்ளாச்சி:பொள்ளாச்சி புறநகர் பகுதியில், கடந்த ஒரு வாரமாக, தினமும், குறிப்பிட்ட நேர இடைவெளியில் அடிக்கடி மின் நிறுத்தம் செய்யப்படுவதால், மக்கள் கவலை அடைந்துள்ளனர்.
பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில், துணைமின் நிலையம், மின் சாதனங்களில் பழுது ஏற்படாமல் இருக்க, மாதந்தோறும் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது.
இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக, பொள்ளாச்சி புறநகரில் உள்ள சூளேஸ்வரன்பட்டி, கோட்டூர் ரோடு உள்ளிட்ட பகுதிகளில், தினமும், குறிப்பிட்ட நேர இடைவெளியில் அடிக்கடி மின் வினியோகத்தை நிறுத்தி, பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது.
இதனால், வீடுகளில் பயன்படுத்தப்படும் மின் சாதனங்களில் பழுது ஏற்படும் வாய்ப்புள்ளதால் மக்கள் கவலை அடைந்துள்ளனர்.
மக்கள் கூறியதாவது:
சூளேஸ்வரன்பட்டி, சமத்துார் உள்ளிட்ட சில பகுதிகளில், கடந்த ஒரு வாரமாக, நாள் முழுவதும் குறிப்பிட்ட நேர இடைவெளியில் மின் சப்ளை வருவதும், போவதுமாக உள்ளது. காலை நேரத்தில் மின் நிறுத்தம் செய்யப்படும்போது, அத்தியாவசியப் பணிகள் பாதிக்கப்பட்டு, பள்ளி மற்றும் கல்லுாரி செல்லும் மாணவர்கள், பணிக்கு செல்வோர் வெகுவாக பாதிக்கின்றனர். இப்பிரச்னைக்கு தீர்வு காண துறை ரீதியான அதிகாரிகளின் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.