/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நீர் வழித்தடங்களில் மணல் கொள்ளை அதிகரிப்பு
/
நீர் வழித்தடங்களில் மணல் கொள்ளை அதிகரிப்பு
ADDED : ஏப் 26, 2024 01:17 AM

தொண்டாமுத்துார்:தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் உள்ள நீர்நிலைகள் வறண்டு காணப்படுவதால், நீர் வழித்தடங்களில் மணல் கொள்ளை அதிகரித்துள்ளது.
கோவையின் மேற்கு புறநகரான தொண்டாமுத்தூர் வட்டார பகுதி, கோவை மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் உள்ளது. இதனால், மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து உருவாகி வரும் ஓடைகள், தொண்டாமுத்துார் வட்டாரத்தில், நொய்யல் ஆறாகவும், வாய்க்கால்களாகவும் உருவாகிறது.
இந்நிலையில், கடந்த மூன்று மாதங்களாக மழை பெய்யாததால், தொண்டாமுத்துார் வட்டாரத்தில் உள்ள நொய்யல் ஆறு உட்பட அனைத்து நீர் நிலைகளும் வறண்டு காணப்படுகிறது. இதனால், ஆறு, வாய்க்கால், பள்ளவாரி ஓடைகளில், மணல் குவிந்து காணப்படுகிறது.
இந்நிலையில், நொய்யலாறு, ஓடைகளில் குவிந்துள்ள மணலை, சிலர் இரவு நேரங்களில் டிராக்டர்கள் மூலம் கொள்ளையடித்து செல்கின்றனர். வறட்சியான காலங்களில், இதுபோல, கனிம வளங்களையும் கொள்ளை அடித்துச் சென்றால் வறட்சி மேலும் அதிகரிக்கும் என்பதை அதிகாரிகள் உணர்ந்து, மணல் கொள்ளையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

