/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மஞ்சூர் சாலையில் வனவிலங்கு நடமாட்டம் அதிகரிப்பு
/
மஞ்சூர் சாலையில் வனவிலங்கு நடமாட்டம் அதிகரிப்பு
ADDED : மார் 05, 2025 10:40 PM
மேட்டுப்பாளையம்; காரமடை வனச்சரகத்திற்கு உட்பட்ட மஞ்சூர் சாலையில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
வெயில் காரணமாக, வனப்பகுதிகளில் வறட்சி நிலவி வருகிறது. இதனால் காரமடையில் இருந்து வெள்ளியங்காடு வழியாக குண்டூர், முள்ளி, மஞ்சூர், கெத்தை, பில்லூர் அணை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் சாலையில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. தண்ணீரை தேடி வனவிலங்குகள் ஊருக்குள் வரும் அபாயம் உள்ளது.
தற்போது, இச்சாலையில் சுற்றுலா பயணிகள், மஞ்சூர் வழியாக ஊட்டி செல்லும் உள்ளூர் மக்கள் என பயணிப்போரின் எண்ணிக்கை அதிகம் உள்ளது.
காரமடை வனத்துறையினர் கூறுகையில், 'இச்சாலை அடர்ந்த வனப்பகுதிக்கு நடுவே செல்வதால், வனத்துறையினர் 24 மணி நேரமும் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வனவிலங்குகளை கண்டால் வாகன ஓட்டிகள் எந்த தொந்தரவும் செய்யக்கூடாது, வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கவும்' என்றனர்.----