/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காற்றின் வேகம் அதிகரிப்பு; வாகன ஓட்டுநர்கள் பாதிப்பு
/
காற்றின் வேகம் அதிகரிப்பு; வாகன ஓட்டுநர்கள் பாதிப்பு
காற்றின் வேகம் அதிகரிப்பு; வாகன ஓட்டுநர்கள் பாதிப்பு
காற்றின் வேகம் அதிகரிப்பு; வாகன ஓட்டுநர்கள் பாதிப்பு
ADDED : மே 27, 2024 11:38 PM
பொள்ளாச்சி:பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுப்பகுதியில், காற்றின் வேகம் அதிகரித்துள்ளதால், வாகன ஓட்டுனர்கள் அவதிப்பட்டனர்.
பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில், கடந்த வாரம் கனமழை பெய்தது. அதேநேரம், கடந்த இரு நாட்களாக மழையின் தாக்கம் குறைந்துள்ளது. மழை பொழிவின்றி வானிலை மேகமூட்டமாக காணப்படுகிறது.
இந்நிலையில், வரும் ஐந்து நாட்களில், கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்குவதற்கு சாதகமான சூழல் இருப்பதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதேநேரம், பொள்ளாச்சி நகரில், நேற்று, காலை முதல் மாலை வரை, வழக்கத்துக்கு மாறாக, காற்றின் வேகம் அதிகரித்து காணப்பட்டது. நகரில் ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த விளம்பர பதாகைகள், காற்றின் வேகத்துக்கு தாக்குப் பிடிக்காமல், கீழே விழுந்தது.
உடுமலை, வால்பாறை நோக்கிய வழித்தடங்களில், சாலையில், இரு சக்கர வாகனங்கள் செல்லமுடியாத அளவுக்கு, மண் துகளும், துாசியும் பறந்தது.
வாகன ஓட்டுநர்கள் கூறுகையில், 'காற்றின் வேகம் அதிகம் இருப்பதால், வாகனம் ஓட்டுவதில் தடுமாற்றம் ஏற்படுகிறது. காற்றால் பரவும் துாசியில் இருந்து, கண்களைப் பாதுகாக்கும் பொருட்டு, சிலர் ெஹல்மெட் மற்றும் கண் கண்ணாடி அணிந்தவாறு பயணித்தனர். பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள், பாதுகாப்புடன் செல்லுமாறு, போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தினர்,' என்றனர்.