/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மேம்பால தடுப்பு சுவர் உயரத்தை அதிகரிக்கணும்!
/
மேம்பால தடுப்பு சுவர் உயரத்தை அதிகரிக்கணும்!
ADDED : மே 10, 2024 11:10 PM
கிணத்துக்கடவு;பொள்ளாச்சி - கோவை ரோட்டில் உள்ள மேம்பால தடுப்புகள் உயரம் குறைவாக இருப்பதால் விபத்து அபாயம் உள்ளது.
பொள்ளாச்சி - கோவை தேசிய நெடுஞ்சாலையில், முக்கிய இடங்களில் வாகன நெரிசலை தவிர்க்க மேம்பாலம் கட்டப்பட்டது. ஆனால், இந்த மேம்பாலத்தின் தடுப்புகள் சிறியதாக இருக்கும் காரணத்தினால், பைக் ஓட்டுநர்கள் பாலத்தின் மீது தடுப்புகள் ஓரம் நின்றும், அமர்ந்தும், ஆபத்தை உணராமல் புகைப்படம் எடுக்கின்றனர்.
சில நேரங்களில் 'செல்பி' எடுக்க ஆசைப்பட்டு பாலத்தின் தடுப்பு ஓரத்தில் நிற்கின்றனர். இதனால் கீழே தவறி விழும் வாய்ப்புள்ளது.
கடந்த சில மாதங்களாக, பாலத்தில் அதிகமாக கார் விபத்துக்கள் ஏற்படுகிறது. எனவே, பைக் ஓட்டுநர்கள் பாலத்தின் மீது நின்று புகைப்படம் எடுப்பது போன்ற செயல்களை தவிர்க்க வேண்டும்.
மேலும், பாலத்தின் தடுப்பு சுவர் உயரத்தை அதிகரிக்க தேசிய நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும், என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.