/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'பொன்னுக்கு வீங்கி' பாதிப்பு அதிகரிப்பு; அரசு தரப்பில் தடுப்பூசி போட பரிந்துரை

ADDED : மார் 12, 2025 11:30 PM
கோவை; குழந்தைகள் பிறந்தவுடன் ஒரு மாதம், இரண்டு மாதம், ஓராண்டு என்று 13 வகையான தடுப்பூசிகள் அரசு தரப்பில் அனைத்து சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகளில் போடப்படுகின்றன.
இதில், எம்.எம்.ஆர்., எனப்படும், தடுப்பூசி தனியார் மருத்துவமனைகளில் போடப்படுகிறது. அரசு தரப்பில், எம்.ஆர்., தடுப்பூசி மட்டுமே போடப்படுகிறது. 'மம்ஸ்' எனப்படும் பொன்னுக்குவீங்கி பாதிப்புக்கு, தடுப்பூசி தற்போது வரை போடப்படுவதில்லை.
ஆனால், இப்பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அரசு தடுப்பூசி பட்டியலில் மம்ஸ் தடுப்பூசி சேர்க்க, பல்வேறு தரப்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இதுகுறித்து, சுகாதாரத்துறை முதன்மை செயலர் செந்தில்குமாரிடம் கேட்டபோது, '' முன்பு இத்தடுப்பூசி போடப்பட்டது. இந்திய அளவில் இதன் தாக்கம் குறைந்ததால், மத்திய அரசால் நிறுத்தப்பட்டது.
தற்போது, தேசிய தடுப்பூசி திட்டத்தின்(யு.பி.ஐ.,)கீழ், மம்ஸ் தடுப்பூசியையும் சேர்க்க, மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளோம். இதுகுறித்து பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளனர். அவ்வாறு, யு.பி.ஐ., பட்டியலில் இணைத்துவிட்டால், இத்தடுப்பூசி இலவசமாக அனைத்து இடங்களிலும் செலுத்தப்படும்,'' என்றார்.