/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பு; 'பார்க்கிங்' வசதியில்லாமல் அவதி
/
போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பு; 'பார்க்கிங்' வசதியில்லாமல் அவதி
போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பு; 'பார்க்கிங்' வசதியில்லாமல் அவதி
போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பு; 'பார்க்கிங்' வசதியில்லாமல் அவதி
ADDED : பிப் 21, 2025 10:52 PM
வால்பாறை; வால்பாறை நகரில், குறுகலான ரோட்டில் ஆக்கிரமிப்புகள் அதிகளவில் உள்ளன. குறிப்பாக, வால்பாறை பழைய பஸ் ஸ்டாண்ட் முதல் புதிய பஸ் ஸ்டாண்ட் வரை சாலைேயாரங்களில் விதிமுறையை மீறி நிறுத்தப்படும் வாகனங்களால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதனால், வால்பாறை வரும் சுற்றுலா பயணியர் வாகனங்கள் 'பார்க்கிங்'செய்ய வசதி இல்லாததால், ரோட்டோரத்தில் நிறுத்தப்படுகின்றன. அந்தப்பகுதியில் போக்குவரத்து பதிப்பும் ஏற்படுகிறது.
பொதுமக்கள் கூறியதாவது: தமிழகத்தில், ஊட்டி, கொடைக்கானலுக்கு அடுத்த படியாக, வால்பாறைக்கு தான் அதிகளவில் சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றனர். நுாற்றுக்கணக்கான வாகனங்கள் வந்து செல்லும், வால்பாறையில் 'பார்க்கிங்' வசதி இல்லாததால், சுற்றுலா பயணியர் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், வால்பாறை அண்ணாதிடலை 'கார் பார்க்கிங்' பகுதியாக மாற்ற நகராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே போல் படகு சவாரி செல்லும் ரோட்டில் உள்ள காலியிடத்தை, சுற்றுலா வாகனங்கள் நிறுத்தும் வகையில், நகராட்சி சார்பில் போதிய வசதிகள் செய்துதர வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.

