/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாசாணியம்மன் கோவிலில் சுதந்திர தின சமபந்தி விருந்து
/
மாசாணியம்மன் கோவிலில் சுதந்திர தின சமபந்தி விருந்து
மாசாணியம்மன் கோவிலில் சுதந்திர தின சமபந்தி விருந்து
மாசாணியம்மன் கோவிலில் சுதந்திர தின சமபந்தி விருந்து
ADDED : ஆக 15, 2024 11:45 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆனைமலை : ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு, அறங்காவலர் குழு தலைவர் முரளிகிருஷ்ணன், தேசியக்கொடியேற்றினார்.
தொடர்ந்து, சமபந்தி பொது விருந்து நடந்தது. பொள்ளாச்சி எம்.பி., ஈஸ்வரசாமி, அறங்காவலர் குழு தலைவர், அறங்காவலர்கள் திருமுருகன், மஞ்சுளாதேவி, பேரூராட்சி தலைவர்கள் கலைச்செல்வி, ஸ்ரீதேவி, ரேணுகாதேவி மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கோவிலுக்கு வந்த ஏழை, எளிய மக்களுக்கு, காணிக்கையாக வரப்பெற்ற பருத்தி நுால் புடவைகள், 3,150 இலவசமாக வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை உதவி ஆணையர் கைலாசமூர்த்தி செய்திருந்தார்.