/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஏமாற்றத்தை வெளிப்படுத்திய தொழில்துறை
/
ஏமாற்றத்தை வெளிப்படுத்திய தொழில்துறை
ADDED : மார் 15, 2025 12:12 AM
கோவை; தமிழக பட்ஜெட்டில் வரவேற்கத்தக்க அம்சங்கள் உள்ளன. கோவைக்கு என சில அறிவிப்புகள் உள்ளன. அதேசமயம் எங்களின் நீண்ட கால கோரிக்கைகளுக்கு இந்த பட்ஜெட்டிலும் ஆறுதலான அறிவிப்புகள் இல்லாதது மனச்சோர்வை அளிக்கிறது என, பெரும்பாலான தொழில் அமைப்புகள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளன.
ராஜேஷ் லுந்த், தலைவர், இந்திய தொழில்வர்த்தக சபை, கோவை: கோவையில் தொழிற்பயிற்சி மையம், 6,100 கி.மீ., ஊரக சாலைகள் மேம்படுத்தப்படும், மகளிர் மேம்பாட்டு நலத் திட்டங்கள், கோவைக்கு மின்சார பஸ், சுகாதார மற்றும் குடும்பநலத்துறைக்கு 21,906 கோடி ரூபாய் ஒதுக்கீடு, உயர் திறன் தொழில்நுட்ப மையம் உள்ளிட்ட அறிவிப்புகளுக்காக முதல்வருக்கு நன்றி. சென்னையில் டிட்கோ உதவியுடன் துணை நகரம் அமைப்பது போன்று, அதி வேகமாக வளரும் கோவையிலும் அமைக்க வேண்டும்.
பட்ஜெட்டை வரவேற்கிறோம்
அனைத்துத் துறை சார்ந்த வளர்ச்சி, பள்ளி, கல்லூரிக் கல்வியில் கூடுதல் கவனம், மக்கள் நலத்திட்டங்கள், தொழிலாளர் நலத்திட்டங்கள், நதி மேம்பாட்டுத் திட்டங்கள் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதாக இந்த பட்ஜெட் அமைந்துள்ளது.
ஜெயபால், மாநில பொதுச்செயலாளர், டி.ஏ.இ.எப்.,
ஏமாற்றம் அளிக்கிறது
எரிசக்தி துறை, மகளிர் தொழில் முனைவோர் ஊக்குவிப்பு, மாணவர்களுக்கு மடிக்கணினி, கைத்தறி, ஜவுளித்துறைக்கான அறிவிப்புகள் வரவேற்கத்தக்கவை.
அதேசமயம், தமிழகத்தில் எல்.டி.சி.டி., மின்கட்டணம், போட்டி மாநிலங்களை விட அதிகம். குறைக்கவில்லை. மேற்கூரை சோலார் நெட்வொர்க் கட்டணம் ரத்து செய்யப்படவில்லை.
ஆண்டுக்கொரு முறை மின்கட்டணம் உயர்த்துவதை இந்தாண்டு உயர்த்தக்கூடாது என வலியுறுத்தி இருந்தோம். ஏற்கனவே நலிவடைந்த, குறு, சிறு நிறுவனங்கள் மேம்பட சிறப்பு நிதி ஒதுக்கீடு போன்றவை குறித்த அறிவிப்பு வரவில்லை. இவை ஏமாற்றம் அளிக்கின்றன. பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கிறோம்.
பிரபு தாமோதரன், கன்வீனர், ஐ.டி.எப்.,:
பயனுள்ள அறிவிப்புகள்
கோவை - சேலம் இடையே அதிவிரைவு ரயில் திட்டத்தை அறிமுகப்படுத்த முயலும் வகையில், அதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய முடிவு செய்திருப்பது மிகவும் நல்லது. இது போன்ற சுலபமான, வேக போக்குவரத்து சீனாவில், தொழில் கிளஸ்ட்டர்களுக்கு மிகுந்த பயன் அளித்தது.
உயர்ந்து வரும் மின் தேவையை கருத்தில் கொண்டு, இரண்டு பெரிய மின் உற்பத்தித் திட்டங்களை அறிவித்து இருப்பது வரவேற்கத்தக்கது
மிதுன் ராம்தாஸ், தலைவர், சீமா: கோவை பம்ப் துறையை ஊக்குவிக்கும் அறிவிப்புகளுக்காக இந்த பட்ஜெட்டை மகிழ்வுடன் வரவேற்கிறோம்.
முதல்வருக்கு நன்றி
கூட்டுக் குடிநீர் திட்டங்களில் உள்ள, திறன் குறைந்த மோட்டார்களை ரூ.6,500 கோடி மதிப்பில் மாற்றியமைப்பது, மோட்டாருக்கான தேவையை அதிகரித்து, இத்துறையை ஊக்குவிக்கும். துறைசார்ந்த அனைத்து தொழில்களும் பயன்பெறும். வேலைவாய்ப்பை ஊக்குவிக்கும், அதி முக்கிய தேவையான செமி கண்டக்டர் ஆலை அறிவிப்புக்காக முதல்வருக்கு நன்றி கூறுகிறோம்.
வெங்கடேச பிரபு, சி.இ.ஓ., சிஸ்பா: ஸ்பின்னிங் மில்களை ஊக்குவிக்கும் அறிவிப்புகள் பெரிதாக ஏதுமில்லை. மேற்கூரை சோலார் மின்திட்ட ஊக்குவிப்பு அறிவிப்பை எதிர்பார்த்தோம். ஏமாற்றமளிக்கும் பட்ஜெட்.
அருள்மொழி, தலைவர், ஓஸ்மா: பழைய விசைத்தறிகளை நாடா இல்லா தறிகளாக மேம்படுத்த ரூ.30 கோடி ஒதுக்கீடு. மின் பற்றாக்குறையை சமாளிக்க, நீர் மின் நிலையம், குறு, சிறு நிறுவனங்களுக்கான கடனுதவி, தொழில் வளர்ச்சியை அதிகரிக்கும்; வரவேற்கத்தக்க பட்ஜெட்.
மணிராஜ், கோப்மா: வரவேற்கத்த பட்ஜெட். ஆனால், பழைய தொழிற்பயிற்சி மையங்கள் நவீனப்படுத்தப்பட வேண்டும்.
கோவையில் புதிய பாலங்கள் அறிவிப்பில்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட சிங்காநல்லூர், சரவணம்பட்டி, கணபதி, விளாங்குறிச்சி தண்ணீர்ப்பந்தல் ரயில்வே பாலம் போன்றவற்றை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெரிதாக ஏதுமில்லை வரவேற்கிறோம் கோரிக்கைகளையும் கவனிங்க
மின்கட்டணங்களை குறைப்பது தொடர்பாக பலமுறை கோரிக்கை வைத்தும் அறிவிப்பு இல்லாதது வேதனை அளிக்கிறது. இக்கூட்டத்தொடரிலாவது அறிவிக்க வேண்டும்.
சிவக்குமார், தலைவர், காட்மா: வரவேற்கத்தக்க பட்ஜெட். அதே நேரத்தில், கோவை மாவட்டத்துக்கு என பிரத்யேக தொழிற்பேட்டை, மின்சார நிலைக் கட்டணம் குறைப்பு ஆகிய கோரிக்கைகளை பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவித்து நிறைவேற்ற வேண்டும்.
திருமலை ரவி, தலைவர், கோஜிம்வா: பம்ப்செட் துறைக்கான அறிவிப்புகள் பல்வேறு தரப்பினருக்கு மகிழ்ச்சிதான். ஆனால், கிரில் பேப்ரிகேஷன் தொழில்முனைவோருக்கு எந்த கோரிக்கையையும் நிறைவேற்றாத பட்ஜெட்.
இலவச மின்சாரம், தொழில்பேட்டை ஆகியவற்றை லோக்சபா தேர்தல் வாக்குறுதிபடி நிறைவேற்றவில்லை. மானியக் குழு கூட்டத்தில் அறிவிக்க வேண்டும். 15 ஆண்டு கால கோரிக்கை கானல் நீராகி விட்டது.
ஜேம்ஸ், தலைவர், டேக்ட்:
கூட்டத்தொடரில் அறிவிக்கணும் கானல் நீரான பட்ஜெட் வருத்தம் அளிக்கிறது
சில அறிவிப்புகள் வரவேற்கத்தக்கவை. கோவையில் குறுந்தொழில்பேட்டை இல்லாதது, மின்சார நிலைக்கட்டணம் குறைப்பு, ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதன் வாயிலாக பீக் ஹவர் கட்டண வசூலை நிறுத்துவதற்கான அறிவிப்பு இல்லாதது வருத்தம் அளிக்கிறது.
மானியக்கோரிக்கைகளில் இவற்றை அறிவித்து, மெட்ரோ திட்ட அறிவிப்புடன், உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்.
ரவீந்திரன், தலைவர், கோசியா: உற்பத்தித் துறை சார்ந்த குறு, சிறு தொழில்களின் முக்கியத்துவம் உணரப்படவில்லை.
சரிவடைந்து வரும் குறு, சிறு தொழில்களைப் பாதுகாக்கவோ, வளர்ச்சியடையச் செய்யவோ எந்த ஒரு முக்கியமான திட்டம், அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. இலவசங்கள், சீர்திருத்த நடவடிக்கைகள் மூலமாக மட்டும் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை எட்ட முடியாது.
மனச்சோர்வு அளிக்கும் பட்ஜெட்
குறு, சிறு தொழில்துறைக்கான மொத்த நிதி ஒதுக்கீடு குறைவாகவே உள்ளது. குறு, சிறு தொழில்களுக்கான கடன் மீது வட்டிச் சலுகை அறிவிக்க வேண்டும். குறு, சிறு தொழில்கள் தொழிற்சாலை அமைக்க வாங்கும் சொத்துகளுக்கு பதிவுக் கட்டணத்தில் 50 சதவீத சலுகை அளிக்க வேண்டும். கோவை, திருப்பூர் போன்ற தொழில்நகரங்களில் உள்கட்டமைப்பு வசதிகளை சீரமைக்கவும், மேம்படுத்தவும் முன்னுரிமை தரப்பட வேண்டும்.
இந்த பட்ஜெட், குறு, சிறு தொழில்களுக்கு ஏமாற்றத்தையும் மனச்சோர்வையும் அளிக்கிறது.
தேவகுமார், தலைவர், சியா:
சிறப்பான பட்ஜெட்
எம்.எஸ்.எம்.இ., துறை வளர்ச்சி அடைவதற்கான அறிவிப்புகள், கோவையின் உள்கட்டமைப்பு மேம்பாடு, தொழில் அமைப்புகளுடன் இணைந்து அரசு மேற்கொள்ளவுள்ள திட்டம், கல்வி நிறுவனங்களும், தொழில் அமைப்புகளும் இணைந்து செயல்படும் திட்டம், பகிர்ந்த பணியிட சேவை உள்ளிட்ட அறிவிப்புகள் சிறப்பானவை.
கார்த்திக், தலைவர், இப்மா:
மனமார்ந்த நன்றி
பம்ப் மோட்டார் தொழில்துறையின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு வித்திடும் வகையிலான பட்ஜெட்டுக்காக முதல்வருக்கு மனமார்ந்த நன்றி. அடுத்த 25 ஆண்டுகளுக்கு இத்தொழிலின் பாதையை உருவாக்கும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. உலக பம்ப் வர்த்தகத்தில், சமநிலையில் உள்ள நமது நாடு, உயர்நிலையை அடைய இந்த அறிவிப்புகள் அமையும்.