ADDED : ஏப் 25, 2024 06:22 AM
அ நிறம் | அளவு
போத்தனூர் : கோவைபுதூர் அடுத்து அறிவொளி நகர் பகுதியை சேர்ந்தவர் முருகேஷ், அனுத்ரா தம்பதிக்கு இரு மாதங்களுக்கு முன் ஆண் குழந்தை பிறந்தது.
கடந்த, 22ல் முருகேஷ் வெள்ளியங்கிரி மலைக்கு சென்றுவிட்டார். குழந்தையின் காலில் வீக்கம் ஏற்பட்டதால், அனுத்ரா தனியார் மருத்துவமனைக்கு சென்று குழந்தையை காண்பித்தார். நேற்று முன்தினம் இரவு, குழந்தைக்கு மருந்து கொடுத்து தூங்க வைத்தார். நேற்று காலை குழந்தை உயிரிழந்திருப்பது தெரிந்தது. மதுக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்,
