/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'பொருளாதாரத்தில் பெரிய மாற்றங்கள் ஏற்படுத்தும் தகவல் தொழில்நுட்பம்'
/
'பொருளாதாரத்தில் பெரிய மாற்றங்கள் ஏற்படுத்தும் தகவல் தொழில்நுட்பம்'
'பொருளாதாரத்தில் பெரிய மாற்றங்கள் ஏற்படுத்தும் தகவல் தொழில்நுட்பம்'
'பொருளாதாரத்தில் பெரிய மாற்றங்கள் ஏற்படுத்தும் தகவல் தொழில்நுட்பம்'
ADDED : ஆக 22, 2024 12:50 AM

கோவை : நவீன தொழில்நுட்பம், பொருளாதாரத்தில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் வலிமை படைத்தது, என, தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசினார்.
ஐசிடி அகாடமி சார்பில், கோவை லீ மெரீடியன் ஓட்டலில், 'பிரிட்ஜ் 24' கருத்தரங்கு, நேற்று நடந்தது. கல்வி நிறுவனத்தினர், தொழில் நிறுவனத்தினர் பங்கேற்ற கருத்தரங்கில், ஐசிடி அகாடமி தலைமை செயல் அதிகாரி ஸ்ரீகாந்த் வரவேற்றார். சிஐஐ மாநில கவுன்சில் தலைவர் ஸ்ரீவத்ஸ் ராம் கவுரவ விருந்தினராக பங்கேற்று பேசினார்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, தமிழக தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாவது:
மென்பொருள் துறையில், உலகுக்கே வழிகாட்டும் மாநிலமாக இருக்க வேண்டும் என்பதில், தமிழக அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. தொழில் நிறுவனங்களுக்கும், மென்பொருள் நிறுவனங்களுக்கும் உள்ள இடைவெளியை குறைக்க, ஐசிடி அகாடமி பாடுபட்டு வருகிறது. பொருளாதாரத்தில் மாற்றம் ஏற்படுத்துவதில், தொழில்நுட்பம் பெரும் பங்கு வகிக்கிறது. கோவையில் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்களில், சாப்ட்வேர் நிறுவனங்களில் பணியாற்ற, மாணவர்களுக்கு உரிய பயிற்சி அளிக்க வேண்டும்.
இதற்கான திறன் மேம்பாட்டு பயிற்சியை ஊக்கப்படுத்த, கல்வி நிறுவனங்களிலேயே வசதி ஏற்படுத்த வேண்டும். சமுதாயத்திற்கு அரசு மட்டுமே அனைத்தையும் செய்து கொடுத்து விட முடியாது; கற்றுத்தந்து விட முடியாது. தனியார் பங்களிப்பும், பொதுமக்கள் பங்களிப்பும் மிகவும் அவசியம். இவ்வாறு, அவர் பேசினார்.
இதன் பின் கல்வி நிறுவனங்களுக்கும், தொழில் நிறுவனங்களுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. சிறப்பாக செயல்பட்ட நிறுவனங்களுக்கு, கல்வியில் மாற்றத்தை ஏற்படுத்தியதற்கான விருதுகள் வழங்கப்பட்டன.