/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பள்ளிகளில் துாய்மை பணி துவக்கம்
/
பள்ளிகளில் துாய்மை பணி துவக்கம்
ADDED : மே 30, 2024 11:32 PM
சூலூர்;கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால், தூய்மை பணிகள் துவக்கப்பட்டுள்ளன.
தேர்வுகள் முடிந்து பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டிருந்தது. விடுமுறை முடிந்து பள்ளிகள், ஜூன் 6ந் தேதி திறக்கப்பட உள்ளன.
இதையடுத்து, பள்ளி வளாகங்கள், மைதானம், வகுப்பறைகள் மற்றும் அனைத்து பகுதிகளையும் தூய்மைப்படுத்த பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டிருந்தனர்.
சூலூர் வட்டாரத்தில், 49 துவக்கப்பள்ளிகள், 21 நடுநிலை, 11 உயர்நிலை மற்றும் எட்டு மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில் தூய்மை பணிகள் துவங்கியுள்ளன.
பள்ளி வளாகத்தில் குவிந்திருந்த இலைகள் மற்றும் குப்பை அகற்றப்பட்டன. புதர்கள் அகற்றும் பணியில் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர்.