/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போலீஸ் ஸ்டேஷன் கட்டடத்தில் 'ஜிம்' அமைக்க வலியுறுத்தல்
/
போலீஸ் ஸ்டேஷன் கட்டடத்தில் 'ஜிம்' அமைக்க வலியுறுத்தல்
போலீஸ் ஸ்டேஷன் கட்டடத்தில் 'ஜிம்' அமைக்க வலியுறுத்தல்
போலீஸ் ஸ்டேஷன் கட்டடத்தில் 'ஜிம்' அமைக்க வலியுறுத்தல்
ADDED : மார் 09, 2025 11:07 PM

வால்பாறை; வால்பாறை உட்கோட்டத்தில், காடம்பாறை, வால்பாறை, முடீஸ், ேஷக்கல்முடி ஆகிய நான்கு போலீஸ் ஸ்டேஷன்கள் மலைப்பகுதியில் உள்ளன. இந்நிலையில், வால்பாறை நகரில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டபட்ட பழைய கட்டடத்தில் போலீஸ் ஸ்டேஷன் இயங்கி வந்தது.
குறுகிய இடத்தில் ஸ்டேஷன் செயல்பட்டதால், இடப்பற்றாக்குறையால் போலீசார் கடும் அவதிக்குள்ளாகினர்.
இந்நிலையில், பழைய போலீஸ் ஸ்டேஷன் அருகில், கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் புதிய போலீஸ் ஸ்டேஷன் திறக்கப்பட்டது. இதனையடுத்து பழைய போலீஸ் ஸ்டேஷன் கட்டடம் எவ்வித பயன்பாடும் இல்லாமல், காட்சிப்பொருளாக உள்ளது. நல்ல நிலையில் உள்ள இந்த போலீஸ் ஸ்டேஷனை 'ஜிம்' பயிற்சி மையமாக மாற்றியமைக்க வேண்டும் என்பது, போலீசாரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
போலீசார் கூறியதாவது, 'வால்பாறை நகரின் மத்தியில் உள்ள பழைய போலீஸ் ஸ்டேஷன் கட்டடம், பயன்பாடு இல்லாமல் காட்சிப்பொருளாக உள்ளது. மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வரும் வகையில், 'ஜிம்' அமைத்தால் ஆண் போலீசார் உடற்பயிற்சி மேற்கொள்ள வசதியாக இருக்கும்.
வால்பாறை உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் பணிபுரியும் பிற ஸ்டேஷன் போலீசாரும் பயன்பெறுவார்கள். மாவட்ட எஸ்.பி., வாயிலாக உடற்பயிற்சி மையம் அமைக்க உரிய உபகரணங்களும் வழங்க வேண்டும்,' என்றனர்.