/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மின்கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தல்! சப் - கலெக்டரிடம் பா.ஜ., - த.மா.கா., மனு
/
மின்கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தல்! சப் - கலெக்டரிடம் பா.ஜ., - த.மா.கா., மனு
மின்கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தல்! சப் - கலெக்டரிடம் பா.ஜ., - த.மா.கா., மனு
மின்கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தல்! சப் - கலெக்டரிடம் பா.ஜ., - த.மா.கா., மனு
ADDED : ஜூலை 23, 2024 02:26 AM

பொள்ளாச்சி:'தமிழக அரசு, மின்கட்டண உயர்வை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, சப் - கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்து வலியுறுத்தப்பட்டது.
பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர் நாள் கூட்டம் நேற்று நடந்தது. சப் - கலெக்டர் கேத்திரின் சரண்யா தலைமை வகித்தார்.
பொள்ளாச்சி நகர பா.ஜ., தலைவர் பரமகுரு மற்றும் நிர்வாகிகள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில், கடந்த, 2022ம் ஆண்டு செப்., மாதம், 26.73 சதவீதம் வரையில் மின்கட்டணம் உயர்த்தப்பட்டது. கடந்தாண்டு வீட்டு உபயோக மின்கட்டணம், 2.18 சதவீதமாக அதிகரிக்கப்பட்டதை அரசு அதை முழுமையாக ஏற்றுக்கொள்வதாக அறிவித்தது. இதனால், சிறு, குறு தொழிற்சாலைகளுக்கான மின்கட்டணம் மற்றும் இதர பயன்பாட்டுக்கான மின்கட்டணம் மட்டுமே அதிகரித்தது.
தற்போது,மூன்றாவது முறையாக ஜூலை 1 முதல் மின்சார கட்டணத்தை உயர்த்தும் அறிவிப்பை, தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ளது. வீட்டு உபயோகத்துக்கான மின்சார கட்டணம், யூனிட் ஒன்றுக்கு, 20 முதல், 55 காசுகள் வரை அதிகரிக்கும். இது ஏழை, நடுத்தர மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். தொழில் வளர்ச்சியும் பாதிக்கும் அபாயம் உள்ளது. எனவே, மின்கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்.
இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.
* த.மா.கா., தெற்கு மாவட்ட தலைவர் குணசேகரன் மற்றும் நிர்வாகிகள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:
தமிழகம் முழுவதும் தி.மு.க., அரசு பொறுப்பேற்ற பின், மக்களுக்கு சுமையாக பல்வேறு வரிகளை உயர்த்தி வருகிறது. இந்நிலையில், மீண்டும் மின் கட்டண உயர்வால் ஏழை, எளிய, நடுத்த மரக்கள், சிறு, குறு தொழில் நிறுவனத்தினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
மின் உற்பத்திக்கான திட்டங்கள் இல்லை; மரபுசாரா எரிசக்தி மின் உற்பத்திக்கு குறிப்பாக சூரியஒளி மின் ஊக்குவிப்பு திட்டம் ஆகியவற்றை ஊக்குவிக்க வேண்டும். தற்போது செயல்பட்டு வருகின்ற அனல், புனல், நிலக்கரி, நீர் மின் திட்டங்களை சீரமைத்து, நவீனப்படுத்தி மின் உற்பத்தியை பெருக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
தனியாரிடம் இருந்து அதிக விலைக்கு வாங்கும் மின் கொள்முதலை குறைத்து, தமிழக அரசு சுய தேவைக்கு தேவையான மின் உற்பத்தியை பெருக்கி, மின் இழப்பை தடுக்கவும், மின்கட்டணத்தை குறைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, வலியுறுத்தப்பட்டுள்ளது.
நிழற்கூரை தேவை
நகராட்சி முன்னாள் கவுன்சிலர் ஐயப்பன் கொடுத்த மனுவில், 'பொள்ளாச்சி தேர்நிலையம் பஸ் ஸ்டாப்பில் பயணியர் நிழற்கூரை இல்லாததால், பழநி, உடுமலை வழி செல்லும் பயணியர் திறந்த வெளியில் நிற்கின்றனர். மழைக்காலம் என்பதால் அருகில் உள்ள கடைகளில் ஒதுங்கி நிற்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. எனவே, சுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான இடத்தில் தற்காலிக நிழற்கூரையாவது அமைக்க வேண்டும்,' என, தெரிவித்துள்ளார்.
நடவடிக்கை எடு ங் க
ஜமீன் ஊத்துக்குளி 3வது வார்டு காந்திநகர் பகுதி மக்கள் கொடுத்த மனுவில், 'ஜமீன் ஊத்துக்குளி 3வது வார்டு காந்திநகரில் கடந்த, இரண்டு நாட்களுக்கு முன், மழைக்கு குப்புசாமி என்பவரது வீடு இடிந்தது. அந்த குடும்பம், அங்கன்வாடி மைய கட்டடத்தில் தங்க வைக்கப்பட்டனர். மறுநாள், கவுன்சிலர் மற்றும் அவரது கணவர், 'இங்கு தங்க கூடாது,' என கூறி சாவியை வாங்கிக்கொண்டார். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, குறிப்பிட்டுள்ளனர்.
திவான்சாபுதுார் கிராமத்தில், மதுரைவீரன்கோவிலில், 50 குடும்பங்கள் உள்ளன. பொது கழிப்பிட வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.