/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தோட்டப்பயிர்களை பாதுகாக்க விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்
/
தோட்டப்பயிர்களை பாதுகாக்க விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்
தோட்டப்பயிர்களை பாதுகாக்க விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்
தோட்டப்பயிர்களை பாதுகாக்க விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்
ADDED : மே 27, 2024 11:47 PM
பொள்ளாச்சி:கோவை மாவட்டத்தில், தற்போது கனமழை பெய்து வருவதால், தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்துள்ள விவசாயிகள்,தொடர் மழையினால் ஏற்படும் பாதிப்பிலிருந்து, காய்கறி மற்றும் பழப்பயிர்கள், பந்தல் காய்கறி மற்றும் தோட்டப்பயிர்களை பாதுகாக்க வேண்டும் என, கலெக்டர் கிராந்திகுமார் அறிவுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து, அவர் அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தோட்டக்கலைப் பயிர்களான வாழை, மரவள்ளி, போன்ற பயிர்களுக்கு உரிய காலத்தில் பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ், பயிர் காப்பீடு செய்ய வேண்டும்.
அனைத்து வயல்களிலும், அதிக நீர் தேங்காமல் உரிய வடிகால் வசதி செய்து, நீர்ப்பாசனம் மற்றும் உரமிடுதல் ஆகியவற்றை தற்காலிகமாக, நிறுத்தி வைக்க வேண்டும்.
காற்றினால் ஏற்படும் சேதத்தை தவிர்க்க, காற்று வீசும் திசைக்கு எதிர் திசையில் குச்சிகளால் முட்டுகொடுத்து, புதியதாக நடவு செய்த செடிகள் சாயாமல் பாதுகாக்கவும்.
வயல்களில் தேவையான பயிர் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி, பயிர் சேதம் ஏற்படாமல் பாதுகாக்க வேண்டும்.
இவ்வாறு,தெரிவிக்கப்பட்டுள்ளது.