/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மூடப்பட்ட குவாரிகளில் விபத்து அபாயம் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தல்
/
மூடப்பட்ட குவாரிகளில் விபத்து அபாயம் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தல்
மூடப்பட்ட குவாரிகளில் விபத்து அபாயம் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தல்
மூடப்பட்ட குவாரிகளில் விபத்து அபாயம் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தல்
ADDED : ஜூலை 24, 2024 12:25 AM

பாலக்காடு;பாலக்காடு மாவட்டத்தில், மூடப்பட்ட குவாரிகளில், மழைக்காலத்தில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தில் மொத்தம், 72 குவாரிகள் உள்ளது. இதில், ஐந்து குவாரிகளின் உரிமம் காலாவதி முடிந்து மூடப்பட்டுள்ளன. மாவட்டத்தில் அதிக குவாரிகள் செயல்படுவது பட்டாம்பி, மண்ணார்க்காடு, ஒற்றைப்பாலம் ஆகிய பகுதிகளாகும். மாவட்டத்தில் அனுமதியின்றி அதிக அளவில் குவாரிகள் செயல்படுகிறது தமிழக எல்லையோரமான முதலமடை பகுதியாகும்.
இந்நிலையில், மூடப்பட்டுள்ள குவாரிகளால், மழை காலத்தில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துகிறது என புகார் எழுந்துள்ளது. குடியிருப்பு பகுதிகளை ஒட்டி உள்ள குவாரி பள்ளங்களில் தேங்கியிருக்கும் மண்ணை அகற்ற உரிமையாளர்கள் தயாராக இல்லை. போதிய பாதுகாப்பு இல்லாத இத்தகைய குவாரிகளில், குழந்தைகள் உட்பட பலரும் குளிப்பதற்கும், மீன் பிடிப்பதற்கும் வருகின்றனர். இது விபத்துக்கு வழி வகுக்கும். பொது மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்துள்ளது.
இதுகுறித்து, புவியியல் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: சமீபத்தில் நடத்திய ஆய்வில், மூடப்பட்ட குவாரிகள் பாதுகாப்பு இல்லை என்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து, விபத்துக்கு வாய்ப்புள்ள மூடப்பட்ட குவாரிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள உரிமையாளர்களிடம் அறிவுறுத்தி உள்ளோம்.
குவாரிகளில் தேங்கியிருக்கும் நீரை, மோட்டார் பயன்படுத்தி வெளியேற்ற வேண்டும். குவாரியை சுற்றி கம்பி வேலி கட்டுதல், குறிப்பாக தண்ணீர் தேங்கி நிற்கும் பகுதியை சுற்றி கம்பி வேலி கட்ட வேண்டும். குவாரிகளில் உள்ள மண்ணை அப்புறப்படுத்த வேண்டும். ஆபத்தை விளைவிக்கும் பெரிய மரங்களை வெட்டி அகற்ற வேண்டும் என, குவாரி உரிமையாளர்களை அறிவுறுத்தியுள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார்.

