/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தட்டப்பயிர் விதைக்க அறிவுறுத்தல்
/
தட்டப்பயிர் விதைக்க அறிவுறுத்தல்
ADDED : செப் 09, 2024 12:58 AM
கோவை:கோவையில் எதிர்வரும் நான்கு நாட்கள், வறண்ட வானிலை மற்றும் துாறல் மழை எதிர்பார்க்கப்படுவதாக, தமிழ்நாடு வேளாண் பல்கலை காலநிலை ஆராய்ச்சி மையம் கணித்துள்ளது.
அதன்படி, வரும் நாட்களில், அதிகபட்ச வெப்பநிலை, 34-35 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்சம் 23-24 டிகிரி செல்சியஸ் ஆகவும் நிலவும்.
காலை நேர காற்றின் ஈரப்பதம் 80 சதவீதமாகவும், மாலை நேர காற்றின் ஈரப்பதம் 50 சதவீதமாகவும் இருக்கும். உள்ளூர் பகுதிகளில் அதிவேக காற்று மற்றும் லேசான மழை பொழிய வாய்ப்புள்ளதால், கரும்பு, வாழை பயிரிட்ட விவசாயிகள், உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. பெறக்கூடிய மழையை பயன்படுத்தி, மானாவாரி நிலத்தில் தீவனச்சோளம் அல்லது தட்டப்பயிர் விதைப்பு மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.