/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
முதியோர் காப்பகங்களை பதிவு செய்ய அறிவுறுத்தல்
/
முதியோர் காப்பகங்களை பதிவு செய்ய அறிவுறுத்தல்
ADDED : மே 10, 2024 01:33 AM
கோவை:கோவை மாவட்டத்தில் செயல்படும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களால் சேவை நோக்கில் அல்லது வணிக நோக்கில் செயல்படுத்தப்படும் முதியோர் இல்லங்கள், ஓய்வு கால முதியோர் இல்லங்கள், முதியோர் வளாகங்கள், நோய் தடுப்பு பராமரிப்பு இல்லங்கள், நல்வாழ்வு பராமரிப்பு இல்லங்கள், இடைநிலை பராமரிப்பு இல்லங்கள் ஆகியவற்றை, பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பாதுகாப்பு சட்டம் - 2007ன் கீழ் மாவட்ட சமூக நலத்துறையில் பதிவு செய்ய வேண்டும்.
கோவை மாவட்டத்தில் பதிவு செய்யாமல், செயல்படுத்தப்படும் முதியோர் இல்லங்கள், ஓய்வு கால முதியோர் இல்லங்கள், முதியோர் வளாகங்களுக்கு, உரிய ஆவணங்களுடன், மாவட்ட சமூக நல அலுவலகத்தில் கருத்துரு சமர்ப்பிக்க வேண்டுமென, கலெக்டர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார்.