/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வேலை செய்யாத ஒப்பந்ததாரர்களை 'பிளாக் லிஸ்ட்'டில் சேர்க்க அறிவுறுத்தல்

ADDED : ஆக 23, 2024 09:01 PM
கோவை:கோவை மாநகராட்சியில் டெண்டர் எடுத்தும் பணிகள் செய்யாமல் உள்ள ஒப்பந்ததாரர்களை, 'பிளாக் லிஸ்ட்'டில் சேர்க்க, பணிகள் குழு தலைவர் சாந்தி அறிவுறுத்தியுள்ளார்.
கோவை மாநகராட்சி மத்திய மண்டலம், 31, 32வது உட்பட்ட பகுதிகளில், 12 லட்சம் ரூபாய்க்கு ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணி மேற்கொள்ள ஒப்பந்தம் கொடுக்கப்பட்டிருந்தது. இப்பணியையும், 48வது வார்டில், 12 லட்சம் ரூபாயில் ஆழ்குழாய் அமைத்தல், 11.40 லட்சம் ரூபாயில், கவுன்சிலர் அலுவலகம் கட்டும் பணியை, மாநகராட்சி பணிகள் குழு தலைவர் சாந்தி ஆய்வு செய்தார்.
மாநகராட்சி பொது நிதியில், வார்டுகளில் செய்வதற்கு பணிகள் எடுத்து இதுவரை செய்யாமல் உள்ள ஒப்பந்ததாரர்களை, 'பிளாக் லிஸ்ட்'டில் சேர்த்து, அபராதம் விதிக்க, அதிகாரிகளுக்கு பணிகள் குழு தலைவர் சாந்தி அறிவுறுத்தினார்.
அப்போது, மாநகராட்சி துணை கமிஷனர் சிவக்குமார், உதவி கமிஷனர் செந்தில்குமரன், உதவி நிர்வாக பொறியாளர் ஹேமலதா, கவுன்சிலர்கள் வைரமுருகன், பார்த்திபன், பிரபா ஆகியோர் உடனிருந்தனர்.