/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆதார விலையில் கொப்பரை கொள்முதல் பொள்ளாச்சி, நெகமத்தில் தீவிரம்
/
ஆதார விலையில் கொப்பரை கொள்முதல் பொள்ளாச்சி, நெகமத்தில் தீவிரம்
ஆதார விலையில் கொப்பரை கொள்முதல் பொள்ளாச்சி, நெகமத்தில் தீவிரம்
ஆதார விலையில் கொப்பரை கொள்முதல் பொள்ளாச்சி, நெகமத்தில் தீவிரம்
ADDED : மே 09, 2024 11:26 PM

பொள்ளாச்சி:பொள்ளாச்சி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், ஆதார விலை திட்டத்தின் கீழ், இதுவரை, 433 டன் கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி மீன்கரை ரோட்டில், பொள்ளாச்சி ஒழுங்குமுறை விற்பனை கூடம் செயல்படுகிறது. இங்கு, அரசின் ஆதார விலை திட்டத்தின் கீழ், 111.60 ரூபாய்க்கு ஒரு கிலோ கொப்பரை கொள்முதல் செய்யும் பணி, கடந்த மார்ச் மாதம் துவங்கியது.
பொள்ளாச்சி பகுதியில், 5,900 மெட்ரிக் டன் வரை கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.தொடர்ந்து, விவசாயிகளிடம் இருந்து கொப்பரை கொள்முதல் செய்யப்படுகிறது.
பொள்ளாச்சி ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் சரவணன் கூறுகையில், ''ஆதார விலை திட்டத்தின் கீழ், 228 விவசாயிகளிடம் இருந்து, 433 டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. இதன் மதிப்பு, 4 கோடியே, 84 லட்சம் ரூபாயாகும். தொடர்ந்து கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது,'' என்றார்.
நெகமம்
நெகமம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், ஆதார விலை திட்டத்தில், கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. விற்பனை கூடத்தில் தற்போது வரை, 11 ஆயிரத்து, 398 மூட்டைகள் (50 கிலோ) கொப்பரை, 6.36 கோடி ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதில், 456 விவசாயிகள் பயனடைந்தனர்.
தனியார் மார்க்கெட்டில் சென்ற வாரம் கொப்பரை (கிலோ) 104 ரூபாய் வரை விற்றது. தற்போது 98 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
எனவே, சென்ற வாரத்தை விட கொப்பரை கொள்முதல் அளவு அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது, என, விற்பனை கூட கண்காணிப்பாளர் ஜெயராமகிருஷ்ணன் தெரிவித்தார்.